பணத்தை கொடுத்து பீட்சாவுடன் கொரோனாவை வாங்க பார்த்த 72 குடும்பங்கள்.!

பணத்தை கொடுத்து பீட்சாவுடன் கொரோனாவை வாங்க பார்த்த 72 குடும்பங்கள்.!

Update: 2020-04-16 10:32 GMT

டெல்லியில் பீட்சா டெலிவரி செய்யும் நபருக்72 குடும்பத்தில் உள்ளவர்களை தனிமைப்படுத்தி வைக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது இதனால் இந்தியாவில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பரவியத்தில் டெல்லி மாநிலம் இரண்டாவதாக உள்ளது. இந்த மாநிலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் உணவுகளை பார்சல் செய்வதற்கு அரசு அனுமதி வழங்கி உள்ளது.

இந்நிலையில் டெல்லியில் உள்ள பிரபல பீட்சா நிறுவனம் சோமேட்டோ மூலம் பீட்சா டெலிவரி வேலை பார்த்த நபருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் விசாரணையில் இவர் 72 குடும்பங்களுக்கு பிட்சா டெலிவெரி செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை 72 குடும்பங்களை சேர்ந்த அனைவரையும் தனிமைப்படுத்தி வைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதனால் மக்கள் அச்சம் கொள்ளவேண்டாம் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். இதனிடையே டெலிவரி செய்யும் நபர்கள் முகக்கவசம் அணியவும் மற்றும் தொற்று ஏற்பட்ட நபருடன் இருந்த 16 டெலிவரி நபர்களை தனிமைப்படுத்தி உள்ளோம். அந்த பிட்சா நிறுவனத்தை மூடி உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News