பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் 8 பேர் கைது! அடுத்தகட்ட களையெடுக்கும் பணி தொடங்கியது!!

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் 8 பேர் கைது! அடுத்தகட்ட களையெடுக்கும் பணி தொடங்கியது!!

Update: 2019-09-10 07:02 GMT


காஷ்மீர் மாநிலத்தில் அமைதியை சீர்குலைப்பதற்காக பாகிஸ்தானில் இருந்து ஊடுருவி உள்ள முஸ்லிம் பயங்கரவாதிகளை களையெடுக்கும் பணியில் ராணுவம் தீவிர ஈடுபட்டு வருகிறது. அதேபோல் பயங்கரவாதிகளுக்கு துணைபோகும் தேச துரோகிகளையும் கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.


பாகிஸ்தானுக்கு கைக்கூலிகளாக செயல்படும் காஷ்மீரில் உள்ள முஸ்லிம் பயங்கரவாதிகள் சிலர், அப்பாவி மக்களை பயமுறுத்தியும், மதத்தின் பெயரால் மூளை சலவை செய்தும் தேசதுரோகத்திற்கு துணைபோக வைத்தனர். இது 30 ஆண்டுகளுக்கு மேலாக காஷ்மீரில் நடைபெற்று வந்துள்ளது.


தற்போது காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவு முஸ்லிம் தீவிரவாதிகளால் எந்த நாசவேலைகளையும் செய்ய முடியவில்லை. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக காஷ்மீரில் எந்த குண்டு வெடிப்பு சம்பவங்களையும் அவர்களால் அரங்கேற்ற முடியவில்லை.





அப்பாவி மாணவர்களிடம் பணத்தை  கொடுத்து ராணுவத்தின் மீது கல்லெறிய வைக்கும் நரித்தனமும் பலிக்கவில்லை. வெள்ளிக்கிழமைகளில் மசூதி்க்கு வரும் அப்பாவி இளைஞர்களிடம் விஷத்தைக் கக்கி, அவர்களை தொழுகை முடிந்ததும் வன்முறைகளில் ஈடுபடுத்தும் பித்தலாட்டங்களையும் நடத்த முடியவில்லை.


இணையதளங்கள் மற்றும்  சமூக வலைத்தளங்கள் மூலமாக வதந்தியைப் பரப்பி, மக்களை பீதியடையச் செய்யவும் முடியவில்லை. பாகிஸ்த்தான் அனுப்பி வைக்கும் வதந்திகளை பரப்பும் மோசடி போட்டோக்கள், வீடியோக்களையும் பரப்பி வன்முறைகளை கட்டவிழ்த்துவிட முடியவில்லை.


இப்படி பாகிஸ்தான் ஆதரவு முஸ்லிம் தீவிரவாதிகளின் அனைத்து கதவுகளும் மூடப்பட்டுவிட்டதால், தற்போது அப்பாவி மக்களை சுட்டுக்கொல்லும் வேலையில் இறங்கி உள்ளனர்.


மக்களை பீதியடையச் செய்வதற்காக, சமீபத்தில் சோப்பூரில் பழ வியாபாரி வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து 2 வயது குழந்தை உள்ளிட் 4 பேரை சுட்டு படுகொலை செய்தனர்.


குண்டு வைப்பது, அப்பாவி மக்களை ஈவுஇரக்கமின்றி சுட்டுகொல்வது போன்ற செயல்திட்டங்களுடன் சோப்பூர் பகுதியில் பயங்கரவாதிகள் முகாமிட்டு உள்ளனர்.


இதனை அறிவிக்கும் விதமாக போஸ்டர்களை ஒட்டும் வேலையை அவர்கள் தொடங்கி உள்ளனர். இதற்காக ஏராளமான போஸ்டர்களை அச்சிட்டு ஒட்டுவதற்கு ஏற்பாடுகளை  செய்தனர்.


இதையும் முளையிலேயே கிள்ளி எறிந்துவிட்டனர் காஷ்மீர் போலீசார். சோப்பூர் பகுதியில் அப்பாவி மக்களை அச்சுறுத்தும் வகையிலும், பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகவும் போஸ்டர்களை ஒட்டுவதற்காக தயாரானபோது போலீசார் சுற்றி வளைத்து அள்ளிச்சென்றனர்.


இதில் ஈடுபட்ட பாகிஸ்தான் ஆதரவு முஸ்லிம் பயங்கரவாதிகள் 8 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். அனைத்து போஸ்டர்களும் பறிமுதல் செய்யப்பட்டனர். அதோடு போஸ்டர் அச்சடிக்க பயன்படுத்திய கம்ப்யூட்டர்கள் மற்றும் பிரண்டர் உள்ளிட்ட பிற சாதனங்களையும் பறிமுதல் செய்தனர்.


கைது செய்யப்பட்ட 8 பேரும் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா முஸ்லிம் பயங்கரவாத இயக்கத்தில் பயிற்சி பெற்றவர்கள் என்பது  விசாரணையில் தெரியவந்துள்ளது.


அவர்கள் அப்பாவிகள் போல் மக்களோடு மக்களாக இருந்து நல்லவர்களாக நாடகம் போட்டதும் தெரியவந்துள்ளது.


இவர்களைப்போன்று காஷ்மீரில் மக்களோடு மக்களாக பதுங்கி உள்ள பாகிஸ்தான் ஆதரவு முஸ்லிம் பயங்கரவாதிகளை சல்லை போட்டு சலிக்கும் வேலையில் ராணுவமும், காஷ்மீர் போலீசாரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


Similar News