880 கிலோ ரேஷன் அரிசி தஞ்சையில் கடத்தல் - தி.மு.க முன்னாள் கவுன்சிலர் கைது!

880 கிலோ ரேஷன் அரிசி தஞ்சையில் கடத்தல் - தி.மு.க முன்னாள் கவுன்சிலர் கைது!

Update: 2020-06-14 06:00 GMT

தஞ்சையில் 880 கிலோ ரேஷன் கடத்தல் தொடர்பாக தி.மு.க முன்னாள் கவுன்சிலர் உட்பட 3 பேரை காவல்துறை கைது செய்துள்ளது.

மக்களுக்காக அரசாங்கம் பொது விநியோக திட்டத்தின் கீழ் இலவச அரிசி வழங்கி வருகிறது, ஊரடங்கு காரணமாக ஏழை, எளியோர் பாதிக்கப்படாமல் இருக்க தற்சமயம் கூடுதலாக ஒருநபருக்கு 5 கிலோ வீதம் குடும்பத்தில் உள்ள அணைவருக்கும் இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது, இதில் சில ஏரியாக்களில் முறைகேடு நடப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் தஞ்சை அடுத்த அம்மன்பேட்டையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

இதில், தஞ்சை பள்ளியக்கிரகார மாவு மில் உரிமையாளரும் தி.மு.க முன்னாள் நகராட்சி கவுன்சிலருமான அசோக்குமார், ரேஷன் கடை விற்பனையாளர் சங்கர், சரக்கு ஆட்டோ ஓட்டுனர் பாபு ஆகியோரை கையும் களவுமாக பிடித்தனர் போலீசார்.

மேலும், அவர்களிடம் இருந்து 18 மூட்டைகளில் இருந்த 880 கிலோ அரிசி கைப்பற்றபட்டது.

Similar News