ஜேஎன்யு விவகாரத்தில் ஒரு விசித்திர திருப்பம்: தலையில் அடிபட்டதாகக் கூறிய இடதுசாரி ஐஷே கோஷ் முகமூடி கோஷ்டிகளுடன் ஜாலியாக உலா வரும் காட்சி! வைரல் ஆகும் வீடியோ காட்சிகள்!

ஜேஎன்யு விவகாரத்தில் ஒரு விசித்திர திருப்பம்: தலையில் அடிபட்டதாகக் கூறிய இடதுசாரி ஐஷே கோஷ் முகமூடி கோஷ்டிகளுடன் ஜாலியாக உலா வரும் காட்சி! வைரல் ஆகும் வீடியோ காட்சிகள்!

Update: 2020-01-07 08:54 GMT

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைகழக வளாகத்துக்குள் நேற்று முன்தினம் இரவு உள்ளே முகமூடிகள் அணிந்து கைகளில் தடிகளுடன் நுழைந்த கும்பல் ஓன்று மாணவர்கள், ஆசிரியர்களை சரமாரிய தாக்கியதில் கிட்டத்தட்ட 25 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


இந்த தாக்குதலை நடத்தியவர்கள் பாஜக ஆதரவு மாணவர் அமைப்பான ஏபிவிபிதான் என இடதுசாரி அமைப்பை சேர்ந்த மாணவ அமைப்பினர் கூறிவருகின்றனர். ஆனால் படுகாயம் அடைந்த 25 க்கும் மேற்பட்டோரில் கிட்டத்தட்ட 22 மாணவர்கள் தங்கள் அமைப்பை சேர்ந்த மாணவர்கள் தான் என்றும், இடதுசாரி அமைப்பு மாணவர்கள்தான் இந்த வன்முறையை நிகழ்த்தினார்கள் என்றும் ஏபிவிபி மாணவர்கள் கூறுகின்றனர்.




https://twitter.com/Piyush_mi/status/1214042736338190337


இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பல்கலைகழக பதிவாளர் வெளியிட்ட அறிக்கையில்” புதிய விடுதி கட்டண நிர்ணையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர் கோஷ்டியினர்தான் கடந்த 3- ந்தேதியில் இருந்து முக மூடி அணிந்து வன்முறையில் ஈடுபட்டு வருவதாக கூறியிருந்தார். எனவே முகமூடி அணிந்து இந்த கொடூரமான தாக்குதல்களை தாக்கியவர்கள் இடதுசாரி அமைப்பை சேர்ந்த மாணவர்கள் அமைப்புதான் என டெல்லிவாசிகள் நம்பத் தொடங்கினர்.





இந்த நிலையில் தாக்குதலில் தானும் காயம் அடைந்ததாக கூறிய இடதுசாரி ஜேஎன்யு மாணவர் அமைப்பின் தலைவியான ஐஷே கோஷ் தாக்குதல் நடைபெற்ற அன்று நள்ளிரவு முகமூடி அணிந்த மர்ம ஆசாமிகளுடன் வளாகத்தின் ஒரு இருட்டான பகுதி வழியாக விடுதிக்கு திரும்பிக் கொண்டிருப்பதை வீடியோ காட்சிகள் நிரூபிக்கின்றன. இந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருவதால் அட்டூழியத்தில் ஈடுபட்டவர்கள் இந்த இடதுசாரி ஆதரவு கோஷ்டிகள்தான் என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மேலும்  இடதுசாரி மாணவர்களின் தலைவி ஐஷே கோஷ் தான் அடிபட்டதாக நடித்துள்ளார் என்பதும் அம்பலமாகியுள்ளது.  


இந்த வீடியோ காட்சிகளை ரிபப்ளிக் தொலைக்காட்சி நிருபர் பியூஷ் மிஸ்ரா சரிபார்த்தப் பிறகு டுவிட்டரில் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


Similar News