தேசியக்கொடியுடன் காரில் அணிவகுத்த பெண்கள் - வானதி சீனிவாசனின் சூப்பர் ஐடியா

நாட்டின் 72 ஆவது சுதந்திர தின விழாவை ஒட்டி வானதி சீனிவாசன் தலைமையில் தேசிய கொடியுடன் காரில் அணிவகுத்த பெண்கள்

Update: 2022-08-07 15:30 GMT

நாட்டின் 75வது சுதந்திர தின விழாவையொட்டி சென்னை பட்டினப்பாக்கத்தில் வானதி சீனிவாசன் தலைமையில் தேசிய கொடியுடன் பெண்கள் காரில் அணிவகுத்துச் சென்றனர்.

நாட்டின் 75வது சுதந்திர தின விழாவை கிராமம் முதல் நகரம் வரை எழுச்சியுடன் கொண்டாட வேண்டும் என்றும் தேசிய கொடி ஏந்தி பேரணிகள் மற்றும் பாத யாத்திரைகள் நடத்திட வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த நிலையில் சுதந்திர தினத்தையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த தமிழக பா.ஜ.க திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக சென்னை பட்டினப்பாக்கத்தில் நேற்று பெண்களின் வாகனப் பேரணி நடந்தது இதில் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் பங்கேற்று பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் உட்பட மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த பேரணியில் முதல் காரை தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளரான நடிகை குஷ்பு ஓட்டிச் சென்றார். அவருக்குப் பின்னால் முன்னாள் எம்.எல்.ஏ டாக்டர் காயத்ரி தேவி உட்பட மகளிர் அணி நிர்வாகிகள் 75 வாகனங்களில் அணிவகுத்துச் சென்றனர்.இந்த பேரணி பட்டினப்பாக்கத்தில் தொடங்கி மத்திய கைலாஷ், சோழிங்கநல்லூர் கிழக்கு கடற்கரை சாலை வழியாக திருவிடைந்தை வரை சென்றது.

அனைத்து கார்களிலும் தேசிய கொடி கட்டப்பட்டிருந்தது. வாகனங்களில் செல்லும் பா.ஜ.க மகளிர் அணியினர் 'பாரத் மாதா கி ஜே' என்ற கோஷத்தை எழுப்பியபடி சென்றனர்.

இந்த பேரணி குறித்து வானதி சீனிவாசன் கூறியதாவது:-

நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் பங்களித்தோர் தமிழகத்தில் ஏராளமானோர் உண்டு.அவர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் முதல் அமைச்சர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தேசிய கொடியை பதிவிட்டிருக்க வேண்டும்.ஆனால் பிரதமர் சொல்லியிருப்பதால் அவர் அதைச் செய்யவில்லை என்று நினைக்கிறேன்.

தேசியக்கொடி தொடர்பான பிரதமரின் கருத்தை செயல்படுத்துவதில் முதலமைச்சரிடம் தீவிரமான முன்னெடுப்பை பார்க்க முடியவில்லை. ஆனால் அந்த முன்னெடுப்பை நாங்கள் செய்த எங்கள் கடமை. இவ்வாறு அவர் கூறினார்.

நடிகை குஷ்பு கூறுகையில் நாட்டின் சிறப்பு மிக்க 75வது சுதந்திர தினத்தை போற்றும் வகையில் இந்த விழிப்புணர்வு பிரச்சார வாகன பயணம் அமைந்திருக்கிறது. எனக்கு கார் ஓட்டுவது மிகவும் பிடிக்கும் தொடங்கி வைக்கும் எந்த நிகழ்வும் வெற்றி பெறும் என்றார்.





 


Similar News