இந்திய விசா விதிமுறைகளை மீறி மதப்பிரச்சாரம் - சிக்கிய நியூசிலாந்து மிஷனரி அமைப்பை சேர்ந்த இந்திய வம்சாவளி நபர்.!

இந்திய விசா விதிமுறைகளை மீறி மதப்பிரச்சாரம் - சிக்கிய நியூசிலாந்து மிஷனரி அமைப்பை சேர்ந்த இந்திய வம்சாவளி நபர்.!

Update: 2020-11-20 07:30 GMT

நியூசிலாந்து நாட்டை மையாமாக கொண்ட ஒரு மிஷனரி அமைப்பு சிக்கியிருப்பது இதுதான் முதல் முறை! இந்திய விசா விதிமுறைகளை மீறி சிக்கிக்கொள்ளும் மிஷனரி அமைப்புகள் பெரும்பாலும் அமெரிக்காவை சேர்ந்தவையாகவே இருக்கும்.

ஆனால் தீபாவளி சமயத்தில் தற்போது ‘கிளாட் டைடிங்க்ஸ் மினிஸ்டிரீஸ்’ என்ற மிஷனரி அமைப்பு சிக்கியுள்ளது.


இந்த அமைப்பு ஆக்லாந்து பகுதியை மையாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்புக்கு தனியாக வெப்சைட் கூட கிடையாது. ஃபேஸ்புக் பக்கம் மட்டுமே உள்ளது. இதுவரை செய்தது போலவே இந்த மிஷனரி அமைப்பின் மீதும் ‘மிஷன் காளி’ அமைப்பு புகார் அனுப்பியுள்ளது.

இந்த அமைப்பின் மூலம் மதப்பிரச்சாரத்தில் ஈடுப்பட்ட இந்திய வம்சாவளி நபரின் பெயர் ‘டெனிஸ் நந்த்! இவர் இந்தோ-ஃபீஜியன் ஆக இருக்க வாய்ப்பு உள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக இந்தோ-ஃபீஜியன் பகுதியில் இருந்த இந்து மக்கள் பெருமளவு மிஷனரி மதத்திற்கு மாறியுள்ளனர். டென்னிஸ் நந்தும் ஒரு ஃபேஸ்புக் பக்கத்தை வைத்துள்ளார். கடைசியாக அவர் 2019ம் ஆண்டு மஹாராஷ்டிராவில் உள்ள அகமதுநகருக்கு வந்துள்ளார்.

இதோ டென்னிஸ் நந்தின் இந்திய வருகைக்கான விளம்பரத்தின் படமும், அவருடன் கூடவே விசா விதிமுறையை மீறிய பாதிரியாரின் புகைப்படமும் உள்ளது.

இந்த மிஷனரிகள் எந்த விசா வைத்திருந்தாலும், இந்தியாவில் மதமாற்றத்தில் ஈடுபடுவது சட்டவிரோதமாகும். உதாரணத்திற்கு இவர்களிடம் மிஷனரி விசா இருந்தால், அதை வைத்து மதமாற்ற முடியாது. மாறாக இந்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அமைப்பில் சேர்ந்து பணிபுரிய மட்டுமே முடியும். ஒரு அமைப்பு இந்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டுமென்றால், அது வெளிநாட்டு பங்களிப்பு விதிமுறைகளை ஒழுக்கமாக பின்பற்றியிருக்க வேண்டும். ஒருவேளை அவர்களிடம் டூரிஸ்ட் விசா மட்டுமே இருந்தால் அதை வியாபாரம் அல்லாத விஷயங்களை செய்ய மட்டுமே பயன்படுத்த முடியும்.

தற்போது இவர்கள் மீது மிஷன் காளி அமைப்பு சார்பாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

நாங்கள் மட்டுமல்ல… நீங்கள் அனைவரும் தனித்தனியாக இவர்கள் மீது புகார் அளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் சட்டவிரோதமாக செயல்படும் மிஷனரிகள் மீது அளிக்கும் புகார்களைப்பற்றி உங்கள் தொடர்ச்சியாக தகவல்களை அனுப்புகிறோம். உங்களுடைய பங்களிப்பை நீங்கள் கொடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் இந்த பதிவை உங்கள் நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரோடு பகிர்ந்துக்கொள்ளுங்கள். அவர்களும் உண்மை நிலையை தெரிந்துக்கொள்ளட்டும். நியாபகமிருக்கட்டும். வெறும் சமூக வலைதளங்களில் விஷயத்தை சொல்வதை விட, கம்பிளைண்ட் கொடுக்கும்போதுதான் அதற்கு வலிமை அதிகம்.

நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு புகாரும் இந்த அமைப்புகளின் எஃப்.ஃபி.ஆர்.ஏ உரிமத்தை ரத்து செய்யும் என்பதோடு, அந்த அமைப்புகளும் பிளாக் லிஸ்ட் செய்யப்படுவார்கள்.

புகார் அளிப்பது எப்படி என்பதை கீழுள்ள லிங்கில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் நினைப்பதை விட உங்களுக்குள் நிறைய ஆற்றல் உண்டு! இதை மிஷனரிகளும் உணரத்தொடங்கிவிட்டனர். அவர்கள் உங்களைப்பார்த்து கலக்கத்தில் உள்ளனர்.

Similar News