"தாலிபான்களால் உயிரே போனாலும் பரவாயில்லை" -ஆப்கானிஸ்தானில் கோவிலை விட்டு வர மறுக்கும் பூசாரி!

உயிர் தாலிபான்களால் போனாலும் அதனை ஏற்றுக்கொள்ள தயார் என்றும் கூறியுள்ளார்.;

Update: 2021-08-17 01:05 GMT

தலிபான்கள் காபூலைக் கைப்பற்றியதாலும், நாட்டில் நிலவும் குழப்பம் காரணமாகவும் ஆப்கானிஸ்தானில் வசித்துவரும் மக்கள் தங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி வரும் சூழலிலும் அங்குள்ள ரத்தன் நாத் கோவிலின் கடைசி இந்து கோவிலின் பூசாரி பண்டிட் ராஜேஷ் குமார் காபூலில் இருந்து வெளியேற மறுத்து வருகிறார். மேலும் தனது உயிர் தாலிபான்களால் போனாலும் அதனை ஏற்றுக்கொள்ள தயார் என்றும் கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் ஆகஸ்ட் 15ஆம் தேதி கைப்பற்றியதை தொடர்ந்து ஜனாதிபதி அஷ்ரப் கானி மற்றும் மூத்த ஊழியர்களும் நாட்டை விட்டு வெளியேறி ஓமானுக்குச் சென்றார். தலிபான்கள் காபூலைக் கைப்பற்றியதாலும் நாட்டில் நிலவும் முழுமையான குழப்பம் காரணமாகவும் அங்கு வசிக்கும் மக்கள் தங்கள் உயிர்களைப் காப்பாற்றிக் கொள்வதற்காக பெருமளவில் வெளியேறுகின்றனர். ஆனால் காபூலில் உள்ள ரத்தன் நாத் கோவிலின் பூசாரி பண்டிட் ராஜேஷ் குமார் காபூலை விட்டு வெளியேற மறுத்து வருகிறார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில் "சில இந்துக்கள் என்னை காபூலை விட்டு வெளியேறும்படி வற்புறுத்தி வருகின்றனர். எனது பயணத்திற்கும் தங்குவதற்கும் ஏற்பாடு செய்யவும் முன்வந்தனர். ஆனால் என் முன்னோர்கள் இந்த கோவிலுக்கு பல நூற்றாண்டுகளாக சேவை செய்தனர். நான் அதை கைவிட மாட்டேன். தலிபான்கள் என்னைக் கொன்றாலும் என் பணியின் போது இறப்பதை நான் சேவையாக கருதுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலை தாலிபான்கள் கைப்பற்றிய பின்னர் அந்நாட்டின் ஜனாதிபதி அஷ்ரப் கானி நாட்டை விட்டு வெளியேறினார். பின்னர் ஆப்கானிஸ்தான் தலிபான்களின் முழு கட்டுப்பாட்டில் வந்தது. பின்னர் அந்நாட்டின் ஜனாதிபதியாக இருந்த அஷ்ரப் கனி நாட்டிலிருந்து வெளியேறி தஜிகிஸ்தானுக்கு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

Source : Organiser 

Tags:    

Similar News