கொரோனா வைரஸ் நிவாரண நிதிக்கு 1.25 கோடி அளித்த அஜித்.. வேறெந்த தமிழ் நடிகர்களும் பெருமளவு நிதி அளிக்காத நிலையில், அஜித்துக்கு குவியும் பாராட்டுக்கள்..

கொரோனா வைரஸ் நிவாரண நிதிக்கு 1.25 கோடி அளித்த அஜித்.. வேறெந்த தமிழ் நடிகர்களும் பெருமளவு நிதி அளிக்காத நிலையில், அஜித்துக்கு குவியும் பாராட்டுக்கள்..

Update: 2020-04-07 11:03 GMT

உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கிறது  கொரோனா வைரஸ். இதனால் இதுவரை 13 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 75 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரதமர் மோடி அவர்கள் மக்களிடம் தங்களால் முடிந்த நிவாரண நிதியை வழங்கலாம் என அறிவித்திருந்தார்.

நடிகர்கள், பிரபலங்கள், முக்கிய நிறுவனங்கள் உள்பட பலரும் பிரதமரின் நிவாரண நிதிக்கு முடிந்த நன்கொடையை வழங்கி வருகிறார்கள். மொத்தம் 6500 கோடி வசூல் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், நடிகர் அஜித் பிரதமரின் நிவாரண நிதிக்கு 50 லட்சமும், முதல்வர் நிவாரண நிதிக்கு 50 லட்சமும், FEFSI க்கு 25 லட்சம் என மொத்தம் 1.25 கோடி அளித்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த நடிகர்கள் பெரும் அளவில் நிதி அளிக்கவில்லை என கூறப்பட்டு வந்த நிலையில் அஜித் நிவாரண நிதி வழங்கியது பாராட்டுக்குரியது.

Similar News