இன்று 6 மணிக்கு வெளியாகிறது தல படத்தின் ட்ரைலர். நம்பர் 1 இடத்தில் அஜித்!!

இன்று 6 மணிக்கு வெளியாகிறது தல படத்தின் ட்ரைலர். நம்பர் 1 இடத்தில் அஜித்!!

Update: 2019-06-12 08:02 GMT

தல அஜித், போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து முடித்துள்ளார். ஹிந்தியில் வெற்றி பெற்ற பிங்க் படத்தின் ரீ-மேக் இது. அஜித் உடன் வித்யாபாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.


ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி படம் திரைக்கு வர உள்ள நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாய் நடைபெற்று வந்தன. அதேசமயம் இப்படம் பற்றிய எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. குறிப்பாக டீசர், டிரைலர், பாடல்கள் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஏங்கி இருந்தனர்.


இந்நிலையில் திடீரென இன்று(ஜூன் 12) மாலை 6 மணியளவில் நேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் வெளியாகும் என தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார். அதோடு வக்கில் தோற்றத்தில், அஜித் இருக்கும் ஸ்டைலான புது போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்.


இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து அஜித் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். டிரைலர் மாலை தான் வெளியாக உள்ளது. ஆனால், டிரைலருக்கான அறிவிப்பையே டிரெண்ட்டிங்கில் நம்பர் 1 இடத்தை கொண்டு வந்துவிட்டனர் அஜித் ரசிகர்கள்


Similar News