'அலா வைகுண்டபுரம் லோ' - தமிழ் ரீமேக்கிற்கு போட்டி போடும் ஹீரோக்கள்!

'அலா வைகுண்டபுரம் லோ' - தமிழ் ரீமேக்கிற்கு போட்டி போடும் ஹீரோக்கள்!

Update: 2020-04-04 11:38 GMT

எந்த ஒரு மொழியுலும் ஒரு படம் பெரும் வெற்றி பெற்று விட்டால் அதனை ரீமேக் செய்ய மற்ற மொழி ஹீரோக்கள் பெரும் ஆரவம் காட்டுவர். குறிப்பாக தெலுங்கிலிருந்து தமிழுக்கு வந்து வெற்றி பெற்ற படங்கள் ஏராளம்.

அந்த வரிசையில் சமீபத்தில் தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான 'அலா வைகுண்டபுரம் லோ' படம் பெரும் வெற்றி பெற்றதையடுத்து தமிழ் ஹீரோக்கள் மத்தியில் போட்டி நிலவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தினில் நடிக்க ஜெயம் ரவி, துருவ் விக்ரம், சிவ கார்த்திகேயன் ஆகியோர் ஆர்வம் காட்டி வருகிறார்களாம்.

'வாலு' படத்தின் இயக்குனரான விஜய் சந்தர் ஐதராபாதிலேயே முகாமிட்டு எப்படியாவது அப்படத்தின் உரிமையை கைபற்றி தமிழில் சிம்புவை வைத்து இயக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியுள்ளாராம்.

Similar News