அலிபாபா நிறுவனர் திரு. ஜாக்மா சொல்லும் வெற்றி ரகசியங்கள்!

அலிபாபா நிறுவனர் திரு. ஜாக்மா சொல்லும் வெற்றி ரகசியங்கள்!

Update: 2020-01-15 13:19 GMT

ஆங்கில ஆசிரியராக
பணி வாழ்வை துவங்கியவர். ஒரு நிறுவனத்தில் 24 பேர் பணிக்கு விண்ணப்பத்து அதில் 23 பேர் தேர்வானபோது, அதில் தேர்வாகத ஒரே நபர். பள்ளி கல்லூரிகளில்
தோல்வி கண்டவர். ஹார்ட்வேட் பல்கலைகழகத்தால் 10 முறை நிராகரிக்கப்பட்டவர். 31 வயது வரை இணையத்தை குறித்து அறியாதவர். இன்று
உலகின் 33 ஆம் பணக்காரர்.
அலிபாபா நிறுவனத்தின் நிறுவனர் திரு ஜாக் மா.


பல நேர்காணல்,
உரைகளின் போது அவர் வழங்கிய வாழ்வியல்
மொழிகள் இங்கே



  • வாழ்வில்
    அவ்வப்போது எதையேனும் புதிதாக முயற்சித்து கொண்டேயிருங்கள். ஏதோவொரு தளத்தில்
    தொடர்ந்து கடுமையாக பணியாற்றி கொண்டேயிருங்கள்.
  • எதுவும் தவறாக
    நிகழாது என்ற நம்பிக்கையை கொள்ளுங்கள்.
  • நம்மிடம் ஒரு
    போதும் பொருளாதார குறைபாடு இருந்ததேயில்லை.
  • நாம் மனிதர்கள் இல்லாமல்
    தேங்குகிறோம். குறிப்பாக கனவுக்காக உயிரை விடும் தீவிரமான மனிதர்களுக்கு தான் அதிக
    பற்றாகுறை
  • நீங்கள் கனவுகளை
    கைவிடாத வரையில் வாய்ப்புக்கான சாத்தியங்கள் நிச்சயம் இருக்கும். கைவிடுதல் என்கிற
    முடிவுதான் வாழ்வின் ஆகப்பெரும் தோல்வி
  • நீங்கள் தவறு
    செய்தால் நிச்சயம் என்னால் மன்னிக்க முடியும்.ஏதும் செய்யாமல் இருந்தால் அதை ஒரு
    போதும் நான் மன்னிக்க மாட்டேன்.
  • பெரும்பாலானவர்களுக்கு
    மாலையில் பல அநாசியமான கனவுகள் பிறக்கும்.ஆனால் அடுத்த நாளை காலை அதே வழக்கமான
    பணிக்கு திரும்பிவிடுவார்கள்.கனவுகளை உடனடியாக செயல்படுத்துங்கள்
  • புகார்கள்
    இருக்கும் இடத்தில் தான் வாய்ப்புகள் எழுகின்றன.
  • உங்களுக்கு தேவை
    ஒரு முயல். மைதானத்தில் 9 முயல்கள்
    இருக்கின்றன. ஒரே ஒரு முயலின் மீது மட்டும் கவனத்தை செலுத்துங்கள்.

Similar News