பயங்கரவாதிகளுக்கு மறக்க முடியாத பாடத்தை மத்திய அரசு கற்பிக்கும் : மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி

பயங்கரவாதிகளுக்கு மறக்க முடியாத பாடத்தை மத்திய அரசு கற்பிக்கும் : மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி

Update: 2019-02-14 18:19 GMT

காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படை வீரர்களின் வாகன அணிவகுப்பில் தற்கொலைப்படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். 70  க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. சுடப்பட்டு படுகாயமடைந்த நிலைமையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இராணுவ வீரர்கள் மீது துளியும் மனிதாபிமானமில்லாமல் இசுலாமிய பயங்கரவாதிகள் மீண்டும், மீண்டும் சுட்டதால் காயமடைந்தோரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால் பிரதமர் மோடி உட்பட அமைச்சர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.




https://twitter.com/arunjaitley/status/1096027161385943041?s=19


இந்த நிலைமையில் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த மூத்த மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி பயங்கரவாதிகளுக்கு மறக்க முடியாத பாடத்தை மத்திய அரசு கற்பிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் ஸ்ரீநருக்கு வெள்ளிக்கிழமை சென்று நிலவரம் குறித்து ஆய்வு நடத்த உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். மேலும் அவர் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் இயக்குநர் ஜெனரல் பாட்நாகருடன் தொலை பேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார். 


Similar News