சபரிமலைக்கு நாத்திக பெண்களை வலுவில் நுழைக்கும் அரசு வாபர் மசூதிக்கு ஆத்திக பெண்கள் சென்றால் கைது செய்வதா?!

சபரிமலைக்கு நாத்திக பெண்களை வலுவில் நுழைக்கும் அரசு வாபர் மசூதிக்கு ஆத்திக பெண்கள் சென்றால் கைது செய்வதா?!

Update: 2019-01-10 03:18 GMT
திருப்பூரில் இருந்து சபரிமலை வாவர் பள்ளிவாசலுக்கு செல்ல முயன்ற தமிழகத்தை சேர்ந்த 3 பெண்கள் உள்ளிட்ட 5 பேரை கேரள போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள வாவர் பள்ளி வாசலுக்குள் செல்ல பெண்களுக்கு அனுமதி கிடையாது. இந்த நிலையில் வாவர் பள்ளிவாசலுக்குள் நுழைய தமிழகத்தில் இருந்து சில பெண்கள் வருவதாக கேரள போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், 3 பெண்கள் உள்ளிட்ட 5 பேரை கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறையில் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட,சுசீலாதேவி, ரேவதி, காந்திமதி, திருப்பதி, முருகசாமி ஆகியோர் இந்து மக்கள் கட்சி தொண்டர்கள் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுப்ப கடுமையான முயற்சிகளை மேற்கொள்ளும் கேரள அரசு, வாவர் பள்ளி வாசலுக்குள் செல்லவும் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் கோரிக்கை.
கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள வாவர் பள்ளி வாசலுக்குள் செல்ல பெண்களுக்கு அனுமதி கிடையாது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுப்ப, போலீஸ் பாதுகாப்புடன் கடுமையான முயற்சிகளை மேற்கொள்ளும் கேரள அரசு வாவர் பள்ளி வாசலுக்குள் செல்லவும் பெண்களை அனுமதிக்க வேண்டும்! அதுதான் கேரள அரசின் பாலின சமத்துவத்தை உணர்த்துவதாக அமையும்!
இந்நிலையில் வாவர் மசூதிக்குள் பெண்கள் நுழைய முயன்றது ஏன்? என்பது குறித்து இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் விளக்கம் அளித்துள்ளார்.
ஐயப்பன் கோயிலுக்குள் பெண்கள் செல்ல போலீஸ் அனுமதி அளிக்கப்பட்டது. அதே போல், மசூதிக்குள் செல்ல அனுமதிக்காமல் பெண்கள் உரிமையை நிலைநாட்ட மறுப்பு தெரிவிக்கிறார்கள்! இது பிணராயி விஜயனின் இரட்டை வேடத்தைக் காட்டுகிறது.
ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பு மறு கண்ணுக்கு வெண்ணெய் என்பது போல் உள்ளது. இந்துகளுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. மசூதியை இழிவு படுத்தாவோ, இஸ்லாமியர்களை புண்படுத்தவோ வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல. எங்களுக்கு இழைக்கப்பட்டுள்ள ஒரு தலைபட்சமான நடவடிக்கையை வாபஸ் பெற வேண்டும் என்பதற்காகவே இந்தப் போராட்டம்! என்று கூறியுள்ளார்.
முன்னதாக, சபரிமலையில் பெண்களை அனுமதித்த கேரள அரசை கண்டித்து, கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு இந்து மக்கள் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சபரிமலை கோவிலின் புனிதத்தைக் கெடுத்த பிணராயி விஜயன் பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுக்கப் பட்டது.
உச்ச நீதிமன்றம் சபரிமலை விவகாரத்தில் மட்டும் பாலின சமத்துவத்தை நிலைநாட்டியது! வாபர் மசூதிக்குள் அது ஏன் செல்லவில்லை!? வாபர் மசூதிக்குள்ளும் பெண்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தை வலியுறுத்த வேண்டும்! அதற்காக வழக்குகள் தொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப் பட்டது.
Credits : Podhigaiselvan , Dhinasari

Similar News