அத்திவரதரை காண வரும் பக்தர்கள் அங்க இங்க அலைய தேவை இல்லை - ஐசிஐசிஐ வங்கியின் மொபைல் ஏ.டி.எம்.!

அத்திவரதரை காண வரும் பக்தர்கள் அங்க இங்க அலைய தேவை இல்லை - ஐசிஐசிஐ வங்கியின் மொபைல் ஏ.டி.எம்.!

Update: 2019-08-01 11:22 GMT

காஞ்சிபுரத்தில் நடைபெறும் ‘அத்திவரதர்’ திருவிழாவிற்கு வருகை தரும் லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் யாத்ரீகர்களின் வசதிக்காக ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி நடமாடும் ஏ.டி.எம் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த நடமாடும் ஏ.டி.எம், பகவான் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு அருகிலுள்ள ரங்கசாமிகுளம் பஸ் நிறுத்தத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். திருவிழாவின் போது தினசரி காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் இந்த ஏ.டி.எம்-ஐ பயன்படுத்திக் கொள்ள முடியும்.


இந்த ஏ.டி.எம், பக்தர்களுக்கு ரூ.100, ரூ.500 மற்றும் ரூ.2,000 ரூபாய் தாள்களை பெற உதவும். மேலும், உடனடி பணப் பரிமாற்றம், கணக்கு இருப்பு விவரம் போன்ற கணக்கு தொடர்பான தகவல்களை பார்க்கவும், மினி ஸ்டேட்மென்ட் பெறவும் உதவும்.


இதுபற்று, ஐசிஐசிஐ வங்கியின் ரீடெய்ல் மண்டல தலைவர் தல்லம் ஸ்ரீகுமார் கூறுகையல், “ஐசிஐசிஐ வங்கியில் வசதிகளை மேம்படுத்த தொடர்ந்து புதிய முன்முயற்சிகளை எடுத்து வருகிறோம். இதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதல் மற்றும் அனுமதியின் பேரில் நடமாடும் ஏ.டி.எம் ஒன்றை நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம். அத்தி வரதர் திருவிழாவில் கலந்து கொள்ளும் லட்சக்கணக்கான பக்தர்கள் உடனடியாக பணம் எடுத்தல் மற்றும் பிற முக்கிய வங்கி சேவைகளை இந்த நடமாடும் ஏ.டி.எம் மூலம் பெற முடியும், என்றார்.




Similar News