அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்துள்ள நிலையில், செய்திகளை ஒளிபரப்பு செய்யும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் செய்திகளை வெளியிட வேண்டும்!!

அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்துள்ள நிலையில், செய்திகளை ஒளிபரப்பு செய்யும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் செய்திகளை வெளியிட வேண்டும்!!

Update: 2019-10-19 06:28 GMT

அயோத்தி ராம ஜென்ம பூமி, பாபர் மசூதி நிலத் தகராறு வழக்கில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாடா, ராம் லல்லா விரஜ்மான் ஆகிய 3 அமைப்புகளும் சமமாகப் பிரித்துக் கொள்ள வேண்டும் என அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2010-ம் ஆண்டில் தீர்ப்பு வழங்கியது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.


சமரச முயற்சி தோல்வி அடைந்ததால் இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் தொடர்ந்து விசாரித்து வருகிறது ,தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் நவம்பர் 17-ம் தேதி ஓய்வு பெறுவதால் அதற்கு முன் தீர்ப்பு வழங்குவது அவசியமாகும். 


அயோத்தி வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அதுதொடர்பாக ஊகத்தின் அடிப்படையில் செய்தி வெளியிடக்கூடாது. அயோத்தி வழக்கு தொடர்பான செய்தியை வெளியிடும்போது பாபர் மசூதி இடிப்பு நடந்தபோது எடுக்கப்பட்ட காட்சிகளை கோப்புக் காட்சிகளாக ஒளிபரப்பக் கூடாது.


இந்தச் செய்தியை ஒளிபரப்பும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். அதுபோலவே கொண்டாட்டங்கள், எதிர்ப்புகள் என எந்தவிதமான காட்சிகளையும் பயன்படுத்த வேண்டாம். ஊடக தர்மத்துடனும், எந்த ஒரு சார்பும் இல்லாமல் செய்தியை சரியான முறையில் செய்தியாக மட்டுமே வெளியிட வேண்டும்.


யாருக்கும் ஆதரவாகவோ அல்லது எதிர்ப்பாகவோ தோன்றும்படியான எண்ணத்தில் செய்தி ஒளிபரப்பும் விதம் இருக்க வேண்டாம். இதுதொடர்பான விவாதங்களில் கூட பொதுமக்களிடம் பற்றத்தை ஏற்படுத்தும் வகையில் வாதங்கள், தகவல்கள் இடம் பெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Similar News