அயோத்தி வழக்கில் முக்கிய இடம் பிடித்த தமிழர்கள் !

அயோத்தி வழக்கில் முக்கிய இடம் பிடித்த தமிழர்கள் !

Update: 2019-11-09 04:55 GMT

70 ஆண்டுகள் பழமை வாய்ந்த வழக்கிற்கு இன்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. உத்திர பிரதேச மாநில அயோத்தியில் இருக்கும் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கு பல வருடங்களாக நடைபெறுகிறது. இந்த நிலத்தை 3 அமைப்பினர் சொந்தம் கொண்டாடுகின்றனர். மூன்று பெரும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று அலகாபாத் நீதி மன்றம் 2010 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. இதை தொடர்ந்து 3 அமைப்பினரும் உச்ச நீதி மன்றம் சென்றனர்.


இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் சமரசம் செய்ய மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்தது. அந்த குழுவில் ஓய்வுபெற்ற நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லா, வாழும் கலை அமைப்பின் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், வழக்கறிஞர் ஸ்ரீராம்பஞ்சு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் மூவரும் தமிழர்கள் ஆவர். கலிஃபுல்லா காரைக்குடியில் பிறந்தவர். 1975-ஆம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்தார். 2000-இல் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியானார்.


வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை சேர்ந்தவர். இவர் 25 ஆண்டுகளாக அயோத்தியில் இரு தரப்பினரிடையே சமரசம் செய்து வருகிறார். குழுவின் 3-ஆவது நபர் சென்னையை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு. மத்தியஸ்தர்கள் சபையை நிறுவியவர்.


Similar News