வங்கி மோசடி விவகாரம்: அமலாக்கத்துறை அதிரடி- சென்னை நிறுவனத்தின் எத்தனை கோடி சொத்துக்கள் முடக்கம் தெரியுமா?
வங்கி மோசடி விவகாரம் தொடர்பாக சென்னை நிறுவனத்தின் ரூபாய் 124 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.
சென்னையில் செயல்படும் சுரானா என்ற நிறுவனம் இது. பெங்களூர் சி.பி.ஐ போலீசார் வகையில் கடன் வாங்கி மோசடி செய்து தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக அமலாக்க பிரிவும் சுரானா நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. முறைகேடான பண பரிமாற்ற குற்றச்சாட்டின் பேரில் அமலாக்க பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இது தொடர்பாக ஏற்கனவே சுரானா நிறுவனத்திற்கு சொந்தமான 124 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக பிரிவு முடக்கி வைத்துள்ளது.
இந்த நிலையில் நேற்று அதே நிறுவனத்துக்கு சொந்தமான மேலும் ரூபாய் 124 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கி உள்ளதாக அமலாக்க பிரிவு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. மொத்தம் ரூபாய் 248 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கி இருப்பதாக அந்த செய்தி குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.