மக்களுக்கு தீபாவளி பரிசு காத்திருக்கிறது - வரி விதிப்பில் அரசு கொண்டு வரப்போகும் அதிரடி மாற்றம்: இந்திய பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கை!

மக்களுக்கு தீபாவளி பரிசு காத்திருக்கிறது - வரி விதிப்பில் அரசு கொண்டு வரப்போகும் அதிரடி மாற்றம்: இந்திய பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கை!

Update: 2019-10-05 08:36 GMT

தீபாவளிக்கு முன்னர் வருமான வரி உச்சவரம்பை 20 சதவீத வரியில் இருந்து 10 சதவீதமாகக் குறைக்க , உயர் வருவாய் பிரிவினருக்கு 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைப்பது என மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது . நுகர்வை அதிகரிக்கச் செய்து, பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் நோக்கத்துடன் வருமான வரி விதிப்பு அடுக்குகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளது.


வருமான வரி சட்டங்களை எளிமைப்படுத்துவது, வருமான வரி விகிதங்களை குறைப்பது குறித்து மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது. வருமான வரி செலுத்துபவர்களுக்கு குறைந்தது 5 சதவீதம் அளவுக்கு பயனளிக்கும் வகையில் மாற்றங்கள் இருக்கும்.


தற்போதைய முறை:



தற்போது 2.5 லட்ச ரூபாய் வரை உள்ள வருமானத்திற்கு வரி விதிக்கப்படுவதில்லை.

3 லட்ச ரூபாய் முதல் 5 லட்ச ரூபாய் வரை உள்ள வருமானத்திற்கு, 5 சதவீத வரி விதிக்கப்படுகிறது.

5 லட்ச ரூபாய் முதல் 10 லட்ச ரூபாய் வரையிலான இரண்டாவது அடுக்கிற்கு 20 சதவீத வரி விதிக்கப்படுகிறது.

10 லட்ச ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 30 சதவீத வரி விதிக்கப்படுகிறது.



இந்நிலையில், 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 10 சதவீத வரி அடுக்கை கொண்டுவருவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த பிரிவுக்கு 20 சதவீத வரி விதிக்கப்படும் நிலையில், அதை 10 சதவீதமாகக் குறைப்பதுதான் திட்டம்.


இதேபோல உயர் வருவாய் பிரிவினருக்கு வருமான வரி அடுக்கை 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாகக் குறைப்பது, மேல்வரி, கூடுதல் வரிகளை நீக்குவது போன்ற திட்டங்களையும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதன் மூலம் நுகர்வு பெருகி, தேவை அதிகரித்து, வளர்ச்சியை ஊக்குவிக்கப்படும்.


வருமான வரி விகிதத்தை குறைப்பதால், வரி செலுத்துபவர்களின் கையில் கூடுதல் பணம் நிற்கும் என்றும், இது உடனடியாக தேவையையும் நுகர்வையும் அதிகரிக்கச் செய்யும். பொருளாதாரத்தை ஊக்குவிக்க பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்துள்ள அரசு, தனிநபர் வருமான வரி செலுத்துபவர்களுக்கும் பயன்தரும் வகையில் நடவடிக்கை எடுப்பது, பொருளாதாரத்தை மேலும் ஊக்குவிக்கும்.




https://twitter.com/MyNation/status/1179749600946577408

Similar News