அமித் ஷாவிடம் அறிக்கை சென்றது - அடுத்து அதிரடி தொடங்குமா.? பீதியில் உறைந்து போயிருக்கும் மேற்கு வங்க மாநிலம்.!

அமித் ஷாவிடம் அறிக்கை சென்றது - அடுத்து அதிரடி தொடங்குமா.? பீதியில் உறைந்து போயிருக்கும் மேற்கு வங்க மாநிலம்.!

Update: 2019-06-26 05:06 GMT

மேற்கு வங்காள மாநிலத்தில் பா.ஜனதா- திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இதில் இரு தரப்பிலும் உயிரிழப்பு சம்பவங்களும் நடந்து வருகிறது.


இதற்கிடையே, 24 பர்கானாக்கள் மாவட்டம் பட்பாரா பகுதியில் சமீபத்தில் வெடிகுண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் மோதலில் ஈடுபட்டனர். இதில் 2 பேர் கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டனர்.


இதையடுத்து, வன்முறை சம்பவங்களை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய உள்துறை அமைச்சரும் , பா.ஜ.க. தலைவருமான அமித்ஷா உத்தரவிட்டார். இதற்காக மேற்கு வங்காள மாநில பா.ஜனதா எம்.பி. அலுவாலியா, சத்யபால் சிங் எம்.பி., பி.டிராம் ஆகிய 3 பேர் கொண்ட குழுவை அமைத்தார்.


இதற்கிடையே, பா.ஜ.க. எம்.பி. அலுவாலியா தலைமையிலான குழுவினர் பட்பாரா பகுதியில் சமீபத்தில் ஆய்வு செய்தனர். சம்பவம் குறித்து கேட்டறிந்தனர்.


இந்நிலையில், பட்பாராவில் பா.ஜ.க.வினர் அடுத்தடுத்து தாக்கி கொல்லப்பட்டது தொடர்பாக ஆய்வுசெய்த பா.ஜ.க. எம்.பி. அலுவாலியா தலைமையிலான குழுவினர் நேற்று பா.ஜ.க. தேசிய தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை சந்தித்தனர். அப்போது அவர்கள் பட்பாராவில் மக்களிடம் கேட்டறிந்த கருத்துக்களை தொகுத்த ஆய்வறிக்கையை சமர்ப்பித்தனர்.


ஏற்கனவே மேற்கு வங்கத்தில் அரங்கேற்றப்படும் வன்முறை காரணமாக, குடியரசு தலைவர் ஆட்சியை பிரகடனம் செய்யலாம் என கூறப்பட்டு வந்த நிலையில், இந்த அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.


Similar News