நக்சல்வாதத்தின் முதுகெலும்பை முறித்தது பா.ஜ.க அரசுதான்! ஜார்கண்ட் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பெருமிதம்!

நக்சல்வாதத்தின் முதுகெலும்பை முறித்தது பா.ஜ.க அரசுதான்! ஜார்கண்ட் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பெருமிதம்!

Update: 2019-12-03 11:54 GMT

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 சட்டசபை தொகுதிகளுக்கும் சென்ற நவம்பர் மாதம் 30 ம்தேதி தொடங்கி வரும் டிசம்பர் 20 ந்தேதி வரை 5 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.


முதல் கட்ட தேர்தல் 6 மாவட்டங்களில் உள்ள சத்ரா, குமுலா, பிஷ்னுப்பூர், லோகர் தாகா, மணிக்கா, லடேகர், பங்கி, தால்டோக் காஞ்ச், பிஷ்ரம்பூர், சாதாரோர், ஹூசைனியாபாத், கார்வா, பகவந்த்பூர் என 13 சட்டசபை தொகுதிகளில் நவம்பர் 30-ம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
இரண்டாம்கட்ட வாக்குப்பதிவை சந்திக்கும் தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. இந்த நிலையில் ஜாம்ஷெட்பூர் மாவட்டத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் இடங்களில் பிரதமர் மோடி பிரசாரம் இன்று பிரச்சாரம் செய்தார். மோடியின் பேச்சைக் கேட்க ஏராளமான ஆதிவாசி மக்கள் கூடினர். அவர்கள் மோடி வந்ததும் அவர்கள் மோடி ஜிந்தாபாத் என தொடர்ந்து கோஷமிட்டனர்.


அதன்பிறகு  கூட்டத்தில் மோடி கூறியதாவது:-
ஜார்ஜண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி இங்கு ஆட்சி ஆண்ட போது முதல்வர் பதவிக்கான நாற்காலி விலை பேசி விற்கப்பட்டது. அவர்கள் ஆட்சிக்காலத்தில் ஊழலும் கொள்ளையும்தான் முக்கிய செய்திகளாக வந்தன. இன்னும் பல தலைவர்கள் ஊழல் வழக்குகளை சந்தித்து வருகிறார்கள் .
ஜார்ஜண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ்  கூட்டணி வஞ்சகம் மற்றும் துரோகம் இவற்றின் அடிப்படையிலானது. பாஜகவின் அரசியல் வஞ்சக அரசியல் அல்ல. இது மக்கள் சேவையை அடிப்படையாக கொண்டது. எங்கள் ஆட்சிக் காலத்தில் மக்களையும், அரசுகளையும் துன்புறுத்திக் கொண்டிருந்த நக்சல்வாதத்தின் முதுகெலும்பு முறிக்கப்பட்டுள்ளது. இதனால் இங்குள்ள ஏழை மக்கள் சுதந்திர காற்றை சுவாசிக்க தொடங்கியுள்ளனர்.


முதல்கட்ட வாக்குப்பதிவின்போது பதிவான வாக்கு சதவீதத்தை வைத்து பார்க்கும்போது பாஜக மீதும் தாமரை சின்னத்தின் மீதும் ஜார்கண்ட் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை  மிக தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது . இந்த மாநிலத்தின் முன்னேற்றத்தை பாஜக ஆட்சியால் மட்டுமே உறுதிப்படுத்த முடியும் என ஜார்க்கண்ட் மக்கள் நம்புகின்றனர். அவர்கள் நம்பிக்கையை வீணாக்க மாட்டோம் என்றார்.


Similar News