காங்கிரஸ் – குமாரசாமியை ஓடஓட துரத்திய கர்நாடக மக்கள்! பா.ஜ.க 12 தொகுதிகளை கைப்பற்றி அபார சாதனை!

காங்கிரஸ் – குமாரசாமியை ஓடஓட துரத்திய கர்நாடக மக்கள்! பா.ஜ.க 12 தொகுதிகளை கைப்பற்றி அபார சாதனை!

Update: 2019-12-09 08:12 GMT


018-ஆம் ஆண்டு, கர்நாடக மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் 224 இடங்களில், பாஜக 105 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 79 இடஙக்களில் வெற்றி பெற்றது. குமாரசாமி தலைமையிலான மதசார்பற்ற ஜனதா தளம் 38 இடங்களில் வெற்றி பெற்றது.


தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜக, ஆட்சி அமைப்பதை தடுப்பதற்காக 38 இடங்களில் வெற்றி பெற்ற குமாரசாமியை முதல்வராக்கியது காங்கிரஸ்.


கடந்த ஜூலை மாதம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 14 எம்எல்ஏக்களும், குமாரசாமி கட்சியை சேர்ந்த 3 எம்எல்ஏக்களும் திடீரென ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார்கள். காங்கிரஸ் தலைவர்களும், குமாரசாமியும் மேற்கொண்ட சமரச முயற்சி தொல்வியடைந்ததால், 14 எம்எல்ஏக்களும் தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர்.


ஆனால் அவர்களின் ராஜினாமாவை ஏற்காமல், 17 பேரையும் அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமார் தகுதி நீக்கம் செய்தார். இதனை எதிர்த்து அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் 17 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் செல்லும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும் மஸ்கி, ராஜராஜேஸ்வரிநகர் ஆகிய 2 தொகுதிகளுக்கான வழக்கு நிலுவையில் உள்ளன. எனவே மீதமுள்ள 15 தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டது.


அதன்படி கடந்த 5-ஆம் தேதி 15 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில் பாஜக, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய மூன்று பிரதான கட்சிகளும் வேட்பாளர்களை களமிறக்கியது.


இந்தத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. தொடக்கத்திலிருந்தே பாஜக 10-க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வகித்து வந்தது.


அனைத்து தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்ற நிலையில், பாஜக 12 தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்தது. காங்கிரஸ் 2தொகுதிகளை மட்டுமே தக்க வைத்துள்ளது. சுயேட்சை வேட்பாளர் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். ஆனால் மதசார்பற்ற ஜனதா தளம் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை.


கர்நாடக சட்டசபையின் தற்போதைய எண்ணிக்கை 222 ஆகும். ஒரு சுயேட்சை எம்எல்ஏவின் ஆதரவை சேர்த்து பாஜகவிற்கு 106 எம்எல்ஏக்கள் உள்ளனர்.  எனவே அறுதிப் பெரும்பான்மைக்கு 112 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில், இடைத் தேர்தலில் 12 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இதனால் பாஜகவின் பலம் 118 ஆக உயர்ந்துள்ளது. ஆகவே எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசுக்கு தனிப்பெரும்பான்மை கிடைத்துள்ளதால் அதற்கான ஆபத்து நீங்கி உள்ளது.


தற்போது பாஜக வெற்றிபெற்றுள்ள 12 தொகுதிகளில் 9 தொகுதிகளை காங்கிரசிடமிருந்து பாஜக கைப்பற்றி உள்ளது. குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியிடமிருந்து 3 தொகுதிகளை பாஜக பறித்துள்ளது. எனவே எதிரணியில் இருந்த 12 தொகுதிகளை பாஜக இடைத்தேர்தலில் பறித்துள்ளது.


அதே நேரம் காங்கிரஸ் தன்னிடமிருந்த 9 தொகுதிகளை இழந்துள்ளது. மதசார்பற்ற ஜனதா தளம் 3 தொகுதிகளை இழந்துள்ளது. கர்நாடக பிரக்யாவந்தா ஜனதா பார்ட்டி ஒரு தொகுதியை இழந்துள்ளது.


கர்நாடக இடைத் தேர்தலைப் பொறுத்தவரை, பாஜக மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் காங்கிரசையும், குமாரசாமியையும் கர்நாடக மக்கள் நிராகரித்துள்ளனர்.


கர்நாடக இடைத்தேர்தலில் பாஜக தோலிவியடையும், அதை வைத்து இன்று முழுவதும் விவாதம் நடத்தலாம் என்று திட்டமிட்டிருந்த தமிழக தொலைக்காட்சிகளின் பிழைப்பில் மண் விழுந்துவிட்டதால், அவர்கள் கர்நாடகாவில் 15 தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவு செய்தியையே இருட்டடிப்பு செய்து வருகின்றன.


தமிழக ஊடகங்களின் நடுநிலையை பார்த்து தமிழர்கள் காறி உமிழ்கின்றனர்.


Similar News