ஓங்கி ஒலித்த 'பாரத் மாதா கி ஜே' கோஷம்- எங்கே தெரியுமா?

Breaking News.

Update: 2021-08-23 00:00 GMT

ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் கட்டுப்பாட்டுக்கு வந்த பிறகு ஆப்கானிஸ்தானிலிருந்து இந்திய விமானப்படை விமானம் மூலம் 100க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை காபூலில் இருந்து இந்தியா கொண்டுவரப்பட்ட போது அவர்கள் 'பாரத் மாதா கி ஜெய்' என்று கோஷமிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு அந்நாட்டில் இருந்து வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் வெளியேறி வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை இந்தியா கொண்டுவரும் முயற்சியை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் காபூலில் இருந்து C17 விமானம் மூலம் 100க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பத்திரமாக இந்தியா கொண்டு வரப்பட்டனர். அந்த இந்திய விமானப்படை விமானம் குஜராத்தின் ஜாம்நகரில் தரையிறங்கிய பிறகு மீட்கப்பட்டவர்கள் 'பாரத் மாதா கி ஜெய்' என்று கோஷமிட்டனர்.

இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. முன்னதாக ஆப்கானிஸ்தானில் சிக்கித் தவிக்கும் சிறுபான்மையினரான இந்துக்கள் மற்றும் சீக்கியர்களை இந்தியா கொண்டு வருவதற்காக புதிய விசா சேவையை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

மேலும் மறைந்த வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் டுவிட்டரில் பதிவிட்ட பதிவிட்ட ட்விட் ஒன்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் "நீங்கள் செவ்வாய் கிரகத்தில் இருந்தாலும் உங்களை மீட்பதற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தயார் நிலையில் இருக்கும்" என்று சுஷ்மா சுவராஜ் பதிவு செய்து இருந்தார். தற்போது தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய சூழலில் அங்கு இருக்கும் இந்தியர்களை வெளியுறவுத்துறை மற்றும் ராணுவம் கூட்டு முயற்சியில் மீட்டு இந்தியா அழைத்து வந்தது இதை உண்மையாக்கியுள்ளது.

Source :

Tags:    

Similar News