சுதந்திர போராட்ட வீரர்களை கௌரவித்த மத்திய அரசு!

Breaking News.

Update: 2021-08-27 13:44 GMT

இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கவுரவிக்கும் விதமாக புதுடில்லியில் நடைபெற்ற சுதந்திர போராட்ட வீரர்களின் கூட்டத்தில் மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் குமார் தலைமை தாங்கி சுதந்திரப் போராட்ட வீரர்களை கௌரவித்தார். இந்த கூட்டத்திற்கு நாடு முழுவதும் இருந்து பல்வேறு மூத்த சுதந்திர போராட்ட வீரர்கள் பங்கேற்றனர்.





இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட மூத்த குடிமக்களை கௌரவிக்கும் விதமாக டெல்லியில் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தியா சுதந்திரம் பெற்ற 75வது ஆண்டில் 'அம்ரித் மஹோத்ஸவ்' கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் குமார் சுதந்திர போராட்ட வீரர்களிடம் கலந்துரையாடினார்.

அப்போது "இந்திய சுதந்திர போராட்டத்தின் போது சுதந்திர போராளிகள் முழு அர்ப்பணிப்புடன் பங்கேற்றனர். அவர்களின் தியாகம் மற்றும் விலை மதிப்பற்ற பங்களிப்பை நமது இந்திய தேசம் எப்போதும் மறக்காது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் அறிவுறுத்தலின்படி சுதந்திரப் போராட்ட வீரர்களின் நலனில் அரசு அக்கறை கொண்டுள்ளது. அவர்களுக்கு சிறந்ததை வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது" என்று தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது சுதந்திரப் போராட்ட வீரர்கள் அரசுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். அவர்களின் ஆலோசனையை கேட்ட மத்திய உள்துறை இணை அமைச்சர் அவர்களின் கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்தார்.

Source : PIB

Tags:    

Similar News