தாராளமயமாக்கப்பட்ட ட்ரோன் விதிகள்-விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியீடு !
Breaking News.
ஆளில்லா விமானம் இயக்குவதற்கான விதிமுறைகளை மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் டிரோன்கள் இயக்குவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்து வந்த நிலையில் தற்போது அதில் தளர்வு அளிக்கப்படுவதாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. கல்வி நிறுவனங்கள் மற்றும் இதர பங்குதாரர்கள் தெரிவித்த கருத்தின் அடிப்படையில் 2021 ஆம் ஆண்டு விதியை மாற்றி அமைத்து தாராளமயமாக்கபட்ட விதி 2021 இன்று வெளியிட்டுள்ளது.
இந்த ட்ரோன் விதிகள், 2021 -ன் 30 முக்கிய அம்சங்கள் மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1. நம்பிக்கை, சுய அத்தாட்சி மற்றும் இடையறாத கண்காணிப்பின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
2. பாதுகாப்பு அம்சங்களுடன், அதிசிறந்த இயல்பு வளர்ச்சியின் யுகத்திற்கு வித்திடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
3. பிரத்தியேக அங்கீகார எண், பிரத்தியேக மாதிரி அடையாள எண், உற்பத்தி சான்றிதழ், ஒப்புதல் சான்றிதழ், பராமரிப்பு சான்றிதழ், இறக்குமதிக்கான அனுமதி, தற்போது பயன்பாட்டில் உள்ள ட்ரோன்களுக்கான அனுமதி, இயக்குவதற்கான உரிமம்.
4. 25 விதமான வடிவங்கள் 5 விதமாக குறைப்பு.
5. 72 விதமான கட்டணங்கள் 4 விதமாக குறைப்பு.
6. கட்டணங்கள், ட்ரோன் அளவின் அடிப்படையில் இல்லாமல் கட்டுப்படியாகக் கூடிய அளவில் குறைக்கப்பட்டுள்ளது.
7. மின்னணு வான் தளம், பயன்படுத்துவதற்கு ஏதுவாக, ஒற்றை சாளர முறையில் வடிவமைக்கப்படும். மிகக்குறைவான மனித இடையீடுகளுடன், தன்னிலையான அனுமதிகள் வழங்கப்படும்.
8.இந்த விதிகள் வெளியிடப்பட்ட 30 நாட்களுக்குள் மின்னணு வான் தளத்தில் பச்சை, மஞ்சள் மற்றும் சிறப்பு மண்டலங்களுடன் விமான பாதை காட்சிப்படுத்தப்படும்.