ரூ.5 கோடி மதிப்பாய்வு கோவில் சொத்து மீட்பு - நீதிமன்ற உத்தரவால் நடவடிக்கை !

40 ஆண்டுகளுக்கும் மேலாக கோவில்களை கையகப்படுத்தி வரும் அறநிலையத்துறை இத்தனை ஆண்டுகளாக கோவில் சொத்துக்களை பாதுகாக்க முடியாத நிலையில், கோவில்களை அரசுக் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Update: 2021-09-01 14:13 GMT

கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்து பல ஆண்டுகளாக வாடகை செலுத்தாமல் ஆக்கிரமிக்கப்பட்ட மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 5 கோடி மதிப்புள்ள நிலம் நீதிமன்ற உத்தரவால் மீட்கப்பட்டுள்ளது. பிச்சுப்பிள்ளை தெருவில் ஆக்கிரமிப்பில் இருந்த இந்த கோவில் நிலத்தை மீட்டு அறநிலையத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

2166 சதுர அடியில் அமைந்துள்ள மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இந்த நிலம் வேதாசலம் என்பவருக்கு வாடகைக்கு விடப்பட்டதாக கூறப்படுகிறது. கபாலீஸ்வரர் கோவிலுக்கு மிக அருகிலேயே இருக்கும் இந்த இடத்துக்கு அவர் பல ஆண்டுகளாக வாடகை தரவில்லை என்றும் கூறப்படுகிறது.

ரூ.8.5 லட்சம் வரை வாடகை செலுத்தாத நிலையில் அறநிலையத்துறை அனுப்பிய நோட்டீஸ் எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பை அகற்றி நிலம் கோவிலுக்கு சொந்தமானது என்று இந்து அறநிலையத் துறை அண்றிவிப்பு பலகை வைத்துள்ளது. இந்த மனையின் மதிப்பு சுமார் ரூ.5 கோடி இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.

கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து பல ஆண்டுகளாக வாடகை செலுத்தாதவரிடமிருந்து கோவில் நிலம் மீட்கப்பட்டதற்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இதேபோல் தமிழகத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள அனைத்து கோவில் சொத்துக்களும் மீட்கப்பட்டு கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக கோவில்களை கையகப்படுத்தி வரும் அறநிலையத்துறை இத்தனை ஆண்டுகளாக கோவில் சொத்துக்களை பாதுகாக்க முடியாத நிலையில், கோவில்களை அரசுக் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Source : Oneindia

Tags:    

Similar News