காவலரை கன்னத்தில் அறைந்து கத்தியை காட்டி மிரட்டிய லாரி ஓட்டுனர் அகமது-போரூரில் பரபரப்பு!

Breaking News.

Update: 2021-08-31 08:55 GMT

சென்னை போரூர் அருகே மாற்று வழியில் செல்ல அறிவுறுத்திய போக்குவரத்துத்துறை காவலரை அடித்து கத்தியை காட்டி மிரட்டிய வடமாநில லாரி ஓட்டுனர் முஸ்தாக் அகமது என்பவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை போரூர் ஏரி அருகே சிக்னல் சந்திப்பில் வாகன பரிசோதனையில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அப்பகுதியாக வந்த லாரியை மாற்று வழியில் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். அப்போது ஒரு லாரியை ஓட்டி வந்த மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த முஸ்தாக் அகமது என்பவர் காவல்துறை அதிகாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது திடீரென்று அந்த காவல்துறை அதிகாரியை கன்னத்தில் அறைந்ததுடன் தான் மறைத்து வைத்திருந்த பெரிய கத்தியைக் காட்டியும் மிரட்டி உள்ளார்.

பின்னர் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அந்த லாரி ஓட்டுனருக்கு தர்ம அடி கொடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து லாரி ஓட்டுநர் முஸ்தாக் அகமது காவல்துறை அதிகாரியை அடிக்கும் காட்சி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Source : Thanthi tv

Tags:    

Similar News