"ராமாயணத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்"-குடியரசு தலைவர்!
Breaking News.
அனைவரிலும் ராமரையும் சீதையையும் காண வேண்டும் என்றும், ராமாயணத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது முக்கியம் என்றும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமாயண கருத்தரங்கை துவக்கி வைத்து பேசிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், "கலை மற்றும் கலாசார நிகழ்வுகள் மூலம் ராமாயணத்தை, மக்களிடம் கொண்டு செல்ல ராமாயண கருத்தரங்கை ஏற்பாடு செய்த முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் அவரது குழுவினரை பாராட்டுகிறேன். ராமாயணத்தை அனைவரிடமும் கொண்டு சேர்ப்பது முக்கியமானது. ராமாயண தத்துவங்கள் நமது வாழ்க்கையை வழிநடத்த தேவையான அனைத்து விதிமுறைகளையும் வழங்குகிறது." என்று பேசினார்.
மகாத்மா காந்தி தான் முதன்முதலில் இந்தியாவில் ராம ராஜ்யத்தை நிறுவ வேண்டும் என்று பேசிய அவர், "நாம் அனைவரையும் பகவான் ராமராகவும் தேவி சீதையாகவும் பார்க்க வேண்டும். பகவான் ராமர் அனைவருக்குமானவர். அவர் அனைவரிலும் இருப்பவர். இந்த எண்ணத்தை அடிப்படையாக வைத்து நமது கடமைகளை நிறைவேற்றுவோம்" என்று பேசியுள்ளார்.
மேலும், ஆன்மிக மற்றும் கலாசார சுற்றுலாவை ஊக்குவிக்க இந்த நிகழ்ச்சி மிகவும் முக்கியம் என்று கூறிய அவர், ராம ராஜ்ஜியத்தில் பாகுபாடு கிடையாது என்று குறிப்பிட்டார். "ராமர் இருக்கும் இடத்தில் தான் அயோத்தி உள்ளது" என்ற அவர், "ராமர் இந்த நகரத்தில் வசிக்கிறார். எனவே தான், இந்த இடம் உண்மையில் அயோத்தி" என்று பேசினார்.
Source : Dinamalar