பயணிகளிடம் குறை கேட்டறிந்த ரயில்வே அமைச்சர்-ஜன் ஆசிர்வாத் யாத்திரையில் சுவாரசியம் !
Breaking News.
மத்திய ரயில்வே அமைச்சர் பயணிகளுடன் இணைந்து ரயில் பயணம் மேற்கொண்டு பயணிகளின் குறையை கேட்டறிந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான அஸ்வினி வைஷ்ணவ் கடந்த மாதம் மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் ரயில்வே துறை அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். பாஜகவின் ஜன் ஆசிர்வாத் யாத்திரையின் ஒரு பகுதியாக ஒடிசாவுக்கு நான்கு நாள் பயணமாக சென்றுள்ள அவர் புவனேஸ்வரில் இருந்து ராய்கடாவுக்கு வியாழக்கிழமை இரவு செல்லும் ரயிலில் ஏறி பயணம் மேற்கொண்டார்.
சமூக ஊடகங்களில் வெளிவந்த வீடியோ ஒன்றில், அமைச்சர் ஒடிய மொழியில் பயணி ஒருவரிடம் குறையை கேட்டறிந்தார். அப்போது அந்த பயணியிடம் அவர் எங்கு வேலை செய்கிறார் என்றும் ரயில் சுத்தமாக இருக்கிறதா என்றும் கேட்டறிந்தார்.
பின்னர் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த ஒரு பெண் பயணியிடம் சென்று பேசினார். அந்தப் பெண் "நான் உங்களை போன்ற ஒருவரை ரயிலில் சந்தித்து பேசுவேன் என்று எதிர்பார்க்கவில்லை" என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். அப்போது நானும் உங்களைப் போல் ஒரு சாதாரண மனிதன் நான் என்று அமைச்சர் கூறினார்.
மேலும் ரயில் பயணத்தின் போது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சக பயணிகள் வழங்கிய ஆலோசனைகளை மத்திய மந்திரி கேட்டறிந்தார். மத்திய ரயில்வே மந்திரி பயணிகள் ரயிலில் பயணம் செய்து சக பயணிகளிடம் கருத்துக்களைக் கேட்டறிந்தது அனைவராலும் பாராட்டப்படுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
Source : pic.twitter.com/ckgb6wpOtC