கோவில் குளத்தில் தண்ணீரில் மிதக்கும் கல்- காஞ்சிபுரத்தில் அதிசயம்!

ராமாயணத்தில் பாலம் அமைக்க பயன்படுத்தப்பட்ட கல் தண்ணீரில் மூழ்காமல் மிதந்ததாக அனைவரும் கேள்விப்பட்டுள்ளோம். இதுவும் அதுபோன்ற கல்லாக இருக்கும் என்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு வந்து ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

Update: 2021-08-22 13:38 GMT

காஞ்சிபுரத்தில் உள்ள கோவில் குளம் ஒன்றில் மிதக்கும் தன்மை கொண்ட கல் ஒன்று கிடைக்கப்பெற்றது அப்பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரத்தில் ஒக்கப்பிறந்தான் கோவில் குளத்தில் இருந்து மிதக்கும் தன்மை கொண்ட கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த சுமைதூக்கும் தொழிலாளியின் தங்கை மகன் ஒரு கல்லை ஆணியால் செதுக்கிக் கொண்டிருந்ததாகவும் அவனிடம் என்ன செய்கிறாய் என்று அந்த தொழிலாளி கேட்டபோது ஒக்கப்பிறந்தான் கோவில் குளத்தில் கல் ஒன்று மிதந்து கொண்டு இருப்பதாகவும் அதில் தான் சிவலிங்கம் வடிக்க முயன்று கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளான்.

பின்னர் அந்த தொழிலாளி அந்த கல்லை வாங்கி ஒரு தண்ணீர் தொட்டியில் போட்டு பார்த்துள்ளார். அது தண்ணீரில் மிதந்ததைக் கண்டு ஆச்சரியமடைந்த அவர் இது குறித்து அருங்காட்சியகத்திற்கு தகவல் அளித்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த அருங்காட்சியகத்தினர் அந்த கல்லை கைப்பற்றி சோதனை நடத்தினர். சோதனைக்குப் பின்னர் இது பவளப்பாறை வகையைச் சேர்ந்த கல் என்றும் இது கடலில்தான் அதிகமாக கிடைக்கும் என்றும் கடலில் இருந்து யாரேனும் எடுத்துவந்து கோவில் குளத்தில் போட்டிருக்கலாம் என்று தெரிவித்தனர்.

ராமாயணத்தில் பாலம் அமைக்க பயன்படுத்தப்பட்ட கல் தண்ணீரில் மூழ்காமல் மிதந்ததாக அனைவரும் கேள்விப்பட்டுள்ளோம். இதுவும் அதுபோன்ற கல்லாக இருக்கும் என்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு வந்து ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். பின்னர் அந்த அதிசய கல் அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டது.


Source : Dinathanthi 

Tags:    

Similar News