எப்போது வேண்டும் என்றாலும் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசலாம் - மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி பேச்சு

எப்போது வேண்டும் என்றாலும் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசலாம் - மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி பேச்சு

Update: 2020-04-11 08:08 GMT

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனால் இதுவரை 16 லட்சத்திற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் ஒரு லட்சத்திற்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது இந்தியாவில் வேகமாக பரவி இதுவரை 7 ஆயிரத்துக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 239 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு விதித்துள்ளது. இந்த உத்தரவு வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி முடிவுக்கு வருகிறது.

இந்நிலையில் மேலும் ஊரடங்கு உத்தரவை நீடிப்பது பற்றி பிரதமர் மோடி அவர்கள் அனைத்து மாநில முதலமைச்சர்கள் உடன் வீடியோ கான்பிரன்ஸ் வழியாக ஆலோசனை மேற்கொண்டார். இதில் மாநில முதலமைச்சர்களிடமிருந்து பல கருத்துக்களை கேட்டறிந்தார். இதற்கு முன்பே பஞ்சாப் மற்றும் ஒடிசா மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு நீடித்துள்ளது. இதனால் மற்ற மாநிலங்களும் ஊரடங்கை நீடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

இந்த ஆலோசனையின் போது பிரதமர் மோடி மற்றும் அனைத்து முதலமைச்சர்களும் முக கவசம் அணிந்து கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்தில் மோடி அவர்கள் பேசியது : நான் வாரத்தில் ஏழு நாட்களும் மற்றும் 24 மணி நேரமும் பணியில் தான் உள்ளேன். இதனால் எந்த முதலமைச்சரும் எப்போது வேண்டுமென்றாலும் என்னை தொடர்பு கொண்டு பேசலாம் மற்றும் கொரோன பற்றிய பரிந்துரைகளை வழங்கலாம் நாம் அனைவரும் ஒன்றாக செயல்பட வேண்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2519344

Similar News