எளிதில் வெளிநாடுகளுக்கு செல்லலாம்.. வந்து விட்டது கொரோனா தடுப்பூசி பாஸ்போர்ட்.!
எளிதில் வெளிநாடுகளுக்கு செல்லலாம்.. வந்து விட்டது கொரோனா தடுப்பூசி பாஸ்போர்ட்.!;
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு செல்வதற்கு மிகவும் கட்டுப்பாடுகள் அதிகமாக உள்ளது. இதனால் வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் மிகுந்து சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதே சமயத்தில் மற்ற நாடுகளில் இன்னும் கொரோனா தொற்று குறையாமல் உள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் விமானப் பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஏர் பப்பிள்ஸ் எனப்படும் இரண்டு தரப்பு ஒப்பந்தம் மூலம், வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி சில நாடுகள் விமானங்களை இயக்கி வருகிறது. தற்போது சில நாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு போக்குவரத்து சீரடைந்து வருகிறது. தடுப்பூசி போடும் பணிகளும் வேகமாக நடந்து வருகிறது.
இதனால் சர்வதேச பயணங்கள் செய்பவர்களுக்கு புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக்கொண்ட தகவல்களை ஆவணப்படுத்துவது முக்கியமானதாகும். இதற்காக வெளிநாட்டுக்கு செல்லும்போது விமான நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் அனைத்து ஆவணங்களையும் காட்ட வேண்டும்.
ஆனால் தடுப்பூசி பாஸ்போர்ட் பெற்றுக்கொள்ளும்போது, மற்ற நாடுகளுக்கு செல்லும்போது கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதாக நமது பாஸ்போர்ட்டில் இருக்கும். அது மட்டுமின்றி வெகுநேரம் காக்க வைக்கமாட்டார்கள். இதற்காகவே தடுப்பூசி பாஸ்போர்ட் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டிற்கு செல்பவர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பாகவும் அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.