கொரோனா சிகிச்சைக்கு பிளாஸ்மா சிகிச்சை செய்யலாமா? அடுத்த கட்ட முயற்சியில் இந்தியா!

கொரோனா சிகிச்சைக்கு பிளாஸ்மா சிகிச்சை செய்யலாமா? அடுத்த கட்ட முயற்சியில் இந்தியா!

Update: 2020-04-11 13:02 GMT

இந்தியாவில் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கும் முறை தொடர்பான நடைமுறைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்த நோயாளியின் ரத்தத்தில், அவருக்கு கொடுக்கப்பட்ட மருந்தின் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். எனவே அவரது ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவை தனியாக பிரித்து எடுத்து, அதை மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கும் கொரோனா நோயாளியின் உடலில் செலுத்தி சிகிச்சை அளிப்பதன் மூலம், அந்த நபருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்றும், இதன் மூலம் அவரை குணப்படுத்த முடியும் மருத்துவ நிபுணர்கள் கருதுகிறார்கள்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள சித்திரை திருநாள் மருத்துவ விஞ்ஞான கழக ஆஸ்பத்திரியில் பரிசோதனை அடிப்படையில் முதல் முறையாக கொரோனா நோயாளிக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க முன்வந்துள்ளது. இதற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) ஒப்புதல் அளித்து இருந்தாலும், இதற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அதிகாரியின் (டி.ஜி.சி.ஐ.) ஒப்புதலையும் பெறுவது கட்டாயம் ஆகும் என்பதால் அவருடைய ஒப்புதலுக்காக காத்திருக்கிறார்கள் என செய்திகள் வெளியாகியுள்ளன.

சீனா மற்றும் அமெரிக்காவிலும் கொரோனா நோயாளிகளுக்கு இதேபோல் பிளாஸ்மா சிகிச்சை அளிப்பதற்கான தற்போது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு ள்ளதாகவும் அதன் முடிவுகள் வெளி வந்த பின்னர் மேற்கண்ட சிகிச்சை குறித்து இறுதி முடிவெடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.

Source: Seithy

Similar News