இஸ்லாமிய மேல் ஜாதியினருக்கும் கீழ் ஜாதியினருக்கும் இடையே எழுப்பப்பட்ட ஜாதி தீண்டாமை சுவர் : பீகாரில் அவலம்

இஸ்லாமிய மேல் ஜாதியினருக்கும் கீழ் ஜாதியினருக்கும் இடையே எழுப்பப்பட்ட ஜாதி தீண்டாமை சுவர் : பீகாரில் அவலம்

Update: 2018-12-12 07:40 GMT
பீகார் மாநிலம் முசாபர்பூரில், இஸ்லாமியர்கள் சாலையை இரண்டாக பிரித்துள்ளனர். சாலையின் ஒரு பகுதி, இஸ்லாமிய உயர்ந்த சாதியாக கருதப்படும் ஷேக் சாதியினருக்கும், சாலையின் வேறொரு பகுதி இஸ்லாமிய மதத்தில் கீழ் சாதியாக கருதப்படும் அன்சாரி சாதியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது என்று இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது . இதில் பிரச்சனை என்னவென்றால் அது குறுகிய சாலை என்பதால் தற்போது சுவரின் காரணமாக இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
முசாபர்பூர், கான்டி அருகே பனப்பூர் ஹவேலி பஞ்சாயத்தில் உள்ள தாமோதரபுரியில் இஸ்லாமிய சமூகத்தினர் அதிகம் வாழ்ந்து வருகின்றனர். கடந்த நவம்பர் 18 ஆம் தேதி அன்சாரி ஜாதியினரின் திருமணம் ஒன்று நடைபெற்றதாகவும் அதன் பிறகு ஷேக் ஜாதியினருக்கும் அன்சாரி ஜாதியினருக்கும் இடையே சண்டை வெடித்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த சண்டை தான் தற்போது ஜாதி சுவராக எழுந்துள்ளது என்றும் கூறப்படுகிறது.
இது குறித்து நசீருதின் அன்சாரி என்பவர் இந்தியா டுடே நிருபரிடம் கூறுகையில், ஜாதி தீண்டாமை குறித்து ஷேக் ஜாதியினர் மீது குற்றம் சாட்டியுள்ளார். அன்சாரி ஜாதியினர் வாழும் இடத்தில் தான் மசூதியும் உள்ளது.
முஹம்மத் சலீம் என்பவர், இந்தியா டுடே நிருபரிடம் கூறுகையில், "ஜாதி சண்டை தான் ஜாதி தீண்டாமை சுவர் எழுப்பப்பட காரணமாக இருந்தது. இந்த சுவர், எங்களையும் மசூதி உள்ள அன்சாரி ஜாதியினர் பகுதியையும் பிரித்துள்ளது. நாங்கள் இனி அந்த பக்கம் சென்று மசூதியில் நமாஸ் செய்ய இயலாது", என்று கூறியுள்ளார்.

Similar News