காங்கிரசில் இருந்து ஓட்டம் பிடித்த பிரபல நடிகை! சிறுபிள்ளைத்தனமாக நடக்கிறார்களாம்!!

காங்கிரசில் இருந்து ஓட்டம் பிடித்த பிரபல நடிகை! சிறுபிள்ளைத்தனமாக நடக்கிறார்களாம்!!

Update: 2019-09-10 12:26 GMT


பிரபல இந்தி நடிகை ஊர்மிளா மடோன்கர். ‘ரங்கீலா’ படம் மூலம் புகழ் பெற்ற இவர், தமிழில் கமலஹாசனுடன் இணைந்து இந்தியன் படத்தில் நடித்துள்ளார்.


கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது, காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தி முன்னிலையில், கடந்த மார்ச் 27-ஆம் தேதி காங்கிரசில் இணைந்தார்.





பின்னர், பாராளுமன்ற தேர்தலில் மும்பை வடக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.


இந்நிலையில், நடிகை ஊர்மிளா மடோன்கர், காங்கிரஸ் கட்சியில் இருந்து இன்று திடீரென விலகியுள்ளார்.


இதுதொடர்பாக அவர் கூறுகையில், “மும்பை காங்கிரசில் நிலவும் சிறுபிள்ளைத்தனமான உள்கட்சி அரசியலை எதிர்த்துப் போராட முடியாததால் கட்சியில் இருந்து விலகுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.


Similar News