தமிழகத்திற்கு ஜி.எஸ்.டி இழப்பீடு தொகையாக ரூ.12,305 கோடி வழங்கியது மத்திய அரசு!

தமிழகத்திற்கு ஜி.எஸ்.டி இழப்பீடு தொகையாக ரூ.12,305 கோடி வழங்கியது மத்திய அரசு!

Update: 2020-07-28 03:30 GMT

2019-20 ஆம் நிதியாண்டில் ஜி.எஸ்.டி இழப்பீடாக 1,65, 302 கோடி ரூபாயை விடுவித்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.

2017 ஆம் ஆண்டு ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தப்பட்டபோது, மாநிலங்களுக்கு ஏற்படும் வரி இழப்பு 5 ஆண்டுகளுக்கு ஈடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, 2019-20 நிதியாண்டில் மொத்தமாக சுமார் 95,000 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வரியாக வசூலிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த மார்ச் மாதத்தில் இறுதியாக 13,806 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டது.

இழப்பீட்டை சரி செய்ய 2017 முதல் 2019 வரையிலான செஸ் தொகை கையிருப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில், தமிழகத்துக்கு மட்டும் 12,305 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகையாக விடுவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களுக்கு 1,65,302 கோடி ரூபாயை, ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையாக மத்திய அரசு வழங்கி உள்ளது. தமிழகத்துக்கு 12,305 கோடி ரூபாயும், புதுச்சேரிக்கு 1,057 கோடி ரூபாயும் விடுவித்துள்ளது.

இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்துக்கு 19,233 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது. இதன் மூலம் 2019-20 நிதியாண்டுக்கு முழு இழப்பீடு தொகையும் மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

Similar News