தி.மு.க-வினரை வெச்சு செஞ்ச சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள்!

தி.மு.க-வினரை வெச்சு செஞ்ச சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள்!

Update: 2020-01-06 05:56 GMT

தி.மு.க-வின் நேர்மையும், உண்மைத்தன்மையும் ஊரறிந்த ஒன்று. தி.மு.க ஆட்சியின்போது கட்டப்பஞ்சாயத்தும், மாமூலும் கொடிகட்டி பறந்தன. ரவுடியிசம் கன்னியாகுமரி முதல் சென்னை வரை வியாபித்திருந்தது. அரசு அலுவலகங்களில் தி.மு.க, கரை வேட்டிக்காரர்கள் செய்த அடாவடிக்கு அளவேயில்லை. தேர்தல்களில் தி.மு.க-வினர் செய்த தில்லுமுல்லுகள் பற்றி சொல்லவே வேண்டாம். கள்ள ஓட்டு, வாக்குச் சாவடி கைப்பற்றுதல் சர்வ சாதாரணமாக நடந்தன. ஆனால் இவை அனைத்தையும் அரங்கேற்றிய தி.மு.க-வினர், இப்போது பரமயோக்கியன் அவதாரம் எடுத்துள்ளதுனர். தி.மு.க-வினரை தவிர, தமிழ்நாட்டில் உள்ள அனைவருமே நேர்மையற்றவர்கள் என்ற முடிவுக்கு வந்து விட்டனர்.


சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல்கள் மிகவும் வெளிப்படையாக நடந்ததை அனைவரும் அறிவர். பெரிய அளவில் வன்முறை இல்லாமல், வாக்குச்சாவடி கைப்பற்றுதல் இல்லாமல், கள்ள ஓட்டுகள் போட முடியாத அளவிற்கு மிக நேர்மையாக நடந்தது. இதை அனைத்து தரப்பினரும் வெகுவாக பாராட்டியுள்ளனர்.


தி.முக. தலைவர் மு.க.ஸ்டாலின் மட்டும் குறை சொல்லிக் கொண்டே இருக்கின்றார். முதலில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த கூடாது என்று சுப்ரீம் கோர்ட் வரை சென்றார். கோர்ட் ஏற்கவில்லை. அதன் பிறகு தேர்தல் முடிவுகளை அறிவிக்க கூடாது  என்று தடை கோரி ஐகோர்ட்டில் படியில் ஏறி இறங்கினார். அதுவும் நிராகரிக்கப்பட்டது. இப்போது உள்ளாட்சித் தேர்தலில் ‌ தேர்வு செய்யப்பட்டுள்ள பிரதிநிதிகள் பதவியேற்க தடை கேட்டு சென்னை ஐகோர்ட்டிக்கு ஓடி உள்ளார். “அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்”  என்று கூறி விடுமுறை தினமான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தலைமை நீதிபதி வீட்டிற்கு திமுக வக்கீல்கள் சென்றனர்.


நீலகண்டன் தலைமையில் திமுக வக்கீல்கள் பட்டாளம், சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி வீட்டிற்கு சென்றது. ஆனால் அவர்களுக்கு "நீதிபதி வீட்டில் இல்லை" என்று சொல்லப்பட்டது.


இதனைத் தொடர்ந்து நீதிபதி ஆதிகேசவலு வீட்டிற்கு திமுக வக்கீல் படை ஓடியது.  அங்கு நீதிபதியிடம் திமுக வக்கீல்கள் முறையிட்டனர்.


அதனை பொறுமையாக கேட்ட நீதிபதி, "உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அவசர வழக்குகளை விசாரித்து வரும் நீதிபதி சத்தியநாராயணனிடம் முறையிடுங்கள்" என்று கூறி அனுப்பி வைத்தார்.


இதனைத் தொடர்ந்து தி.மு.க வக்கீல் பட்டாளம், அங்கிருந்து நீதிபதி சத்யநாராயணாவின் வீட்டிற்கு ஓடியது. ஓய்வில் இருந்த அவரிடம் முறையிட்டனர். அதனை பொறுமையுடன் கேட்ட நீதிபதி சத்யநாராயணா, "இன்று விடுமுறை தினம் என்பதால், தலைமை நீதிபதி ஒப்புதல் இல்லாமல் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது. திங்கள்கிழமை (இன்று) கோர்ட்டில் வந்து முறையிடுங்கள்" என்று கூறி அனுப்பி வைத்தார்.


கருணாநிதி இறந்ததைத் தொடர்ந்து அவரது பிணத்தை மெரினா கடற்கரையில் புதைக்க வேண்டும் என்று கோரி, நீதிபதியின் வீட்டுக் கதவைத் தட்டினர். அவரும் அதனை அவசர வழக்காக விசாரித்தார். மறுநாள் காலையில் தீர்ப்பும் வழங்கப்பட்டது.


அன்று முதல் எதற்கெடுத்தாலும் தி.மு.க அவசர வழக்கைதான் தொடரும். இதை அவர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர். மு.க.ஸ்டாலின் முகத்தில் கரி பூசும் வகையில் நீதிபதிகள், தி.மு.க வக்கீல்களை வெச்சு செய்துள்ளனர்.


Similar News