எல்லையில் என்ன அடி வாங்கினாலும், இந்தியாவில் முதலீடு செய்வதை நிறுத்த மாட்டோம் - இந்திய நிறுவனங்களை பதம் பார்க்கும் சீன அரசு வங்கி!

எல்லையில் என்ன அடி வாங்கினாலும், இந்தியாவில் முதலீடு செய்வதை நிறுத்த மாட்டோம் - இந்திய நிறுவனங்களை பதம் பார்க்கும் சீன அரசு வங்கி!

Update: 2020-07-08 06:44 GMT

நிதி நிறுவனமான எச்.டி.எப்.சி உள்ளிட்ட பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பல்வேறு நிறுவனங்களில் சீன முதலீடு செய்து இருப்பது தெரியவந்துள்ளது.

ஏப்ரல் நடுப்பகுதியில், பங்குச் சந்தை வெளிட்ட தரவுகள் படி, பீப்பிள்ஸ் பாங்க் ஆப் சீனா (பிபிஓசி) எச்.டி.எஃப்.சி வங்கியிலும், பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பல நிறுவனங்களிலும் பங்குகளை வைத்திருக்கிறது.

இருப்பினும், இவை அனைத்தும் கண்காணிப்புக்கு கீழே உள்ளன. ஏனெனில் அவை நிறுவனங்களின் மொத்த பங்குகளில்  1%  வரம்பை விடக் குறைவாக உள்ளன.

மேலும் சிமென்ட் துறையின் முக்கிய நிறுவனமான அம்புஜா சிமெண்டில் 0.32% பங்குகளையும், மருந்தியல் துறையில் முக்கிய இருப்பைக் கொண்ட பிரமல் எண்டர்பிரைசஸில் 0.43% பங்குகளையும் பீப்பிள்ஸ் பாங்க் ஆப் சீனா வாங்கியுள்ளது.

சரியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சீன மத்திய வங்கி இங்கு கிளைகள் அமைக்க ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற்றிருந்தது. இந்தியாவில் சீன முதலீடுகள் குறித்த இரண்டு சமீபத்திய அறிக்கைகள், பல நிதிகள் மற்றும் முதலீட்டு நிறுவனங்கள், அதன் அரசாங்கத்தால் நேரடியாக கட்டுப்படுத்தப்பட்ட அல்லது மறைமுகமாக செல்வாக்கை இந்தியாவின் மீது  செலுத்தியுள்ளன என்பதை காட்டுகிறது.

இதுதொடர்பாக சமீபத்தில் வெளியான அறிக்கையில், இந்தியாவின் பொருளாதாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களில் சீனா முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.




 


Similar News