சீனா மீது 2 ம் முறையாக கொரோனா கிருமிகள் படையெடுப்பு: மீண்டும் பயத்தில் நடுங்கும் சீன அரசு..

சீனா மீது 2 ம் முறையாக கொரோனா கிருமிகள் படையெடுப்பு: மீண்டும் பயத்தில் நடுங்கும் சீன அரசு..

Update: 2020-04-13 05:48 GMT

உலகத்துக்கு முதன் முதலாக கொரோனா கிருமிகளை அறிமுகம் செய்தது சீனாதான். இங்குள்ள வூஹான் மாநில இறைச்சி குப்பையில் இருந்து சென்ற மாதம் இறுதியில் உயிர்த்தெழுந்த கொரோனா கிருமி அந்த மாகாணத்தை முழுக்க நாசம் செய்ததுடன் அந்த மாகாணத்துக்கு சென்று வந்த உலக பயணிகளை தொற்றிக் கொண்டு இன்று உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 1 கோடி பேர் வரை கொரோனா சோதனைக்கு உட்பட்டு கிடக்கின்றனர். சாவு எண்ணிக்கையும் 1 லட்சத்தை நெருங்குகிறது.

ஆனால் சீனா முழுவதும் இந்த நோய் பரவவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே மாகாணத்தில் மட்டும் பாதித்ததால் சீனா அதை தனது இரும்புக் கரங்களைக் கொண்டு 3 மாதங்களில் கட்டுக்குள் கொண்டு வந்தது. ஆனால் கட்டுக்குள் கொண்டு வந்த முறைகளை இன்னும் உலகத்துக்கு சொல்லாமல் அடம் பிடித்து வருகிறது.

இந்த நிலையில் நம் நாட்டில் எல்லாம் சரியாகிவிட்டது என்று சீனா நினைத்திருந்த நேரத்தில் கடந்த 2 வாரங்களாக வரும் தகவல்கள் சீனாவுக்கு மீண்டும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இப்போது சீனாவின் எல்லையோரங்களில் உள்ள அனைத்து நகரங்களிலும் புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்புகள் தெரியத் தொடங்கியுள்ளது.

அதாவது ஏற்கனவே சீனாவில் இருந்து பக்கத்துக்கு நாடுகளுக்கு சென்ற சீனாக்காரர்கள் இப்போது நிலைமை சீராகிவிட்டது என தங்கள் தாய் நாட்டுக்கு திரும்பி வருகின்றனர். ஆனால் அவர்கள் தங்களுக்கே தெரியாமல் சென்ற இடத்தில் ஏற்பட்ட பழைய தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக ரஷ்யாவின் எல்லைபுறத்தில் இருக்கும் வடகிழக்கு ஹீலோங்ஜியாங் மாகாணத்தில் 56 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன – இதில் 49 வழக்குகள் ரஷ்யாவிலிருந்து திரும்பி வந்த சீனாக்கரர்களால் என கூறப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை மொத்தம் 108 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவாகியுள்ளன. சென்ற சனிக்கிழமை இது 99 ஆக இருந்தது, மறுநாளே பாதிக்கு பாதி கூடிவிட்டது என சீன சுகாதார துறை தெரிவித்துள்ளது. மேலும் தினமும் சராசரியாக 90 வழக்குகள் உறுதி செய்யப்படுவதாக கூறியுள்ளது.

இதனால் பீதியடைந்துள்ள சீன அரசு எல்லை நகரங்களான சுஃபென்ஹே மற்றும் ஹிலொங்ஜியாங்கின் தலைநகரான ஹார்பின் வழியே வெளிநாட்டிலிருந்து சீனா திரும்பும் நபர்கள் அனைவரும் 28 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கும், நியூக்ளிக் அமிலம் மற்றும் ஆன்டிபாடி சோதனைகளுக்கும் உட்படுத்தப்பட வேண்டும் என்று இப்போது உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் சீன சுகாதாரத்துறை நிபுணர்கள் கூறுகையில்" சீனாவில் தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளது. அங்கு வுஹன் உள்ளிட்ட எல்லா நகரங்களும் திறக்கப்பட்டு உள்ளது. அங்கு ஹோட்டல்கள், கடைகள் திறக்கப்பட்டுள்ளது. முக்கியமாக சில இடங்களில் மால்கள், தியேட்டர்கள் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் அங்கு மக்கள் மீண்டும் செல்ல தொடங்கி உள்ளனர்.

இந்த நிலையில் எல்லை பகுதிகள் வழியாக இங்கு வந்துள்ள மக்கள், மற்றும் வெளிநாட்டுக்காரர்கள் மூலம் சீனாவில் கொரோனாவின் செகண்ட் வேவ் உருவாக வாய்ப்புள்ளது என்றும், அவ்வாறு மீண்டும் உருவானால் சீனாவுக்கு அது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்றும் கூறியுள்ளனர். இந்த நிலையில் நேற்று சீன அதிபர் ஜின் ஜியாங் தலைமையில் நிலைமையை சமாளிக்க உயர்நிலை கூட்டம் நடைபெற்றது.   

Similar News