தலை குப்புற விழுந்து மீசையில் மண் ஒட்டினாலும் சீனா வெளியில் சொல்லாது - கமுக்கமாக மறைக்கப்படும் சீன தரப்பு சேதங்கள்!

தலை குப்புற விழுந்து மீசையில் மண் ஒட்டினாலும் சீனா வெளியில் சொல்லாது - கமுக்கமாக மறைக்கப்படும் சீன தரப்பு சேதங்கள்!

Update: 2020-06-17 04:44 GMT

இந்தியா - சீனா இடையேயான எல்லை மோதலில் இரு தரப்பிலும் பலத்த சேதம் உண்டானதாக தகவல் வெளிவந்து கொண்டிருக்கும் வேளையில், தாய் நாட்டை விமர்சித்து ஒரு சில ஊடகங்கள் குளிர் காய்ந்து வருவதை காண முடிகிறது.

இந்திய இராணுவம் வெளிப்படையாக பாதிப்பு குறித்து அறிக்கை விட்டதைப்போல, சீன இராணுவத்திடம் இருந்து நேர்மையை எதிர்பார்க்க முடியாது. கம்யூனிஸ்ட் நாடான சீனாவில் அவர்கள் சொல்வது தான் செய்தி, மக்கள் கேட்பது தான் உண்மை. இந்தியாவை போல ஊடாக சுதந்திரம் கிடையாது.

சீன தரப்பிலும் உயிரழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் எத்தனை என்பது குறித்து இதுவரை அதிகாரபூர்வ தகவல் இல்லை. ஆனால் சீனா கைப்பற்றிய இடங்களை தக்கவைத்துக்கொள்வதில் உறுதியாக உள்ளது என்பது புலப்படுகிறது.

இந்திய தரப்பில் இன்னும் பல பேர் வீர மரணம் அடைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. பல வீரர்களின் உடல்கள் இன்னும் கிடைக்கவில்லை.

தற்போது சீனாவால் கைது செய்யப்பட்ட வீரர்களை மீட்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. நேற்று இரவு துப்பாக்கி சண்டை இருதரப்புக்கும் இடையே நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Similar News