ஈரானின் பகைமைக்கு ஆளாகியுள்ள பாகிஸ்தான்

ஈரானின் பகைமைக்கு ஆளாகியுள்ள பாகிஸ்தான்

Update: 2019-02-18 17:24 GMT

கடந்த வியாழக் கிழமை அன்று, காஷ்மீர் புல்வாமா பகுதியில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் இந்திய வீரர்கள் 40 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தால் இந்தியர்கள் கடுமையாக அதிர்ச்சி அடைந்தனர். உலக நாடுகள் பாகிஸ்தானையும், தீவிரவாத இயக்கங்களையும் கண்டித்தன. இந்த சம்பவம் நடைபெறுவதற்கு முதல்நாள் புதன்கிழமை அன்று பாகிஸ்தான் எல்லைப் பகுதியை ஒட்டிய சிஸ்டன் - பலுசிஸ்தான் மாகாணத்தில் பேருந்தில் சென்று கொண்டிருந்த ஈரான் பாதுகாப்பு படையினர் மீது தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டதில் 27 வீரர்கள் பலியானார்கள்.


இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெயிஷ் அல் அத் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. பாகிஸ்தான் அரசும், உளவுத்துறையும் பயங்கரவாத அமைப்புகளுக்கு அடைக்கலம் கொடுப்பதாக குற்றம்சாட்டிய ஈரான் ராணுவ தளபதி, இதற்கு உரிய விலை பாகிஸ்தான் கொடுத்தே தீர வேண்டும் என்று எச்சரித்து இருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் தூதரை அழைத்தும் ஈரான் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தை சும்மா விடப்போவதில்லை என்றும், உரிய பதிலடி கொடுக்கப்படும் என்றும் அந்த நாடு கூறியுள்ளது. பயங்கரவாதத்தை தங்கள் நாட்டில் வளர்த்துவரும் பாகிஸ்தான் தற்போது இரான் மற்றும் இந்தியா இரு நாடுகளின் வஞ்சங்களுக்கும் ஆளாகியுள்ளது.  


Similar News