விழுப்புரம் அதிமுக மக்களவை தொகுதி உறுப்பினர் ராஜேந்திரன் சாலை விபத்தில் மரணம்: கட்சியினர் அதிர்ச்சி

விழுப்புரம் அதிமுக மக்களவை தொகுதி உறுப்பினர் ராஜேந்திரன் சாலை விபத்தில் மரணம்: கட்சியினர் அதிர்ச்சி

Update: 2019-02-23 04:22 GMT

விழுப்புரம், ஜக்காம்பட்டியில் உள்ள தனது இல்லத்தில் இருந்து எம்.பி., ராஜேந்திரன் காரில் சென்னை சென்று கொண்டிருந்தார். திண்டிவனம் அருகே சென்று கொண்டிருந்தபோது அவரது கார் விபத்தில் சிக்கியது. பலத்த காயமடைந்த அவர், திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


ராஜேந்திரனின் கார் டிரைவர் அருமைச்செல்வம் உள்ளிட்ட 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து திண்டிவனம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


சாலை விபத்தில் பலியான  ராஜேந்திரன் குடும்பத்தினருக்கு அதிமுக தலைவர்கள் தொண்டர்கள் சென்று தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.  


Similar News