புல்வாமா சம்பவத்தில் பாகிஸ்தான் தொடர்பு: ஆதாரங்களை நட்பு நாடுகளிடம் மட்டுமே வழங்குவோம்: மத்திய அரசு

புல்வாமா சம்பவத்தில் பாகிஸ்தான் தொடர்பு: ஆதாரங்களை நட்பு நாடுகளிடம் மட்டுமே வழங்குவோம்: மத்திய அரசு

Update: 2019-02-21 04:26 GMT

பிப்.,14 ம் தேதி காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீது கொடூரமான முறையில் ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினான். 


முதலில் இந்த தாக்குதலில் தங்களுக்கு தொடர்பு இல்லை என மறுத்து வந்த பாக்கிஸ்தான், பிறகு இந்த தாக்குதலில் எங்களுக்கு தொடர்பு உள்ளது என்பதற்கான ஆதாரம் இருந்தால் இந்தியா கொடுக்கட்டும் எனவும், அது தொடர்பான எந்த விசாரணைக்கும் தாங்கள் தயாராக இருப்பதாகவும் பாக்கிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் முகம்மது பைசல் கூறி இருந்தார்.


காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபாவும் ஆதாரங்கள் இருந்தால் பாகிஸ்தானுக்கு இந்தியா வழங்கவேண்டும் என்றும், புதிய பாகிஸ்தான் பிரதமர் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும் பாகிஸ்தானுக்கு ஆதரவாளர் போல பேசினார்.   


இந்நிலையில், இந்த தாக்குதல் தொடர்பு குறித்து, பாகிஸ்தானிடம் ஆதாரங்களை வழங்க முடியாது' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதேசமயம், பயங்கரவாதத்தை ஒடுக்கும் நோக்கில், அந்த ஆதாரங்களை நட்பு நாடுகளிடம் வழங்க தயாராக இருப்பதாகவும், அரசு அறிவித்துள்ளது.


Similar News