கொரோனா வைரஸ் காரணத்தினால் சென்னையில் இருந்து வெளியூர் செல்பவர்களே அதிகம்.!

கொரோனா வைரஸ் காரணத்தினால் சென்னையில் இருந்து வெளியூர் செல்பவர்களே அதிகம்.!

Update: 2020-06-15 07:29 GMT

சீனாவில் இருந்து பரவியகொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த வைரஸ் இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், டெல்லி ஆகிய மாநிலங்களில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை மாவட்டத்தில் தான் கொரோனா பரவுதல் தினந்தோறும் அதிகரித்து வருகிறது. இதனால் உள்நாட்டு விமானம் மூலம் சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

சென்னை விமான நிலையத்தில் இன்று டெல்லி, கொல்கத்தா, கவுகாத்தி, அந்தமான், ஹைதராபாத், பெங்களூா், திருவனந்தபுரம், மதுரை, திருச்சி, தூத்துக்குடி, சேலம் ஆகிய பகுதிகளுக்கு சுமார் 30 விமானங்கள் இயக்கப்படுகிறது.

இந்த இடங்களுக்கு செல்லும் விமானத்தில் சுமாா் 3,700 பேர் பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். அதிலும் கொல்கத்தா, கவுகாத்தி, ஹைதராபாத், திருவனந்தபுரம், பெங்களூா் போன்ற இடங்களுக்கு அதிகம் பேர் பயணம் செய்கின்றனர். ஆனால், இந்த 30 உள்நாட்டு விமானத்தில் திரும்பி சென்னைக்கு வரும் பயணிகள் மிக குறைவாக வருகிறார்கள். சென்னையில் வரும் 30 விமானத்தில் சுமார் 1800 பேர் மட்டும் தான் முன்பதிவு செய்து பயணிக்கிறார்கள். இதனால் பயணிகளின் என்ணிக்கை 50 சதவீதம் குறைவாக உள்ளது.   

Similar News