எடியூரப்பா அரசை அடுத்து தமிழக அரசும் இப்போது அதிரடி : ஊர் பெயர்களில் தாய்மொழி உச்சரிப்பே இனி ஆங்கிலத்திலும்.!

எடியூரப்பா அரசை அடுத்து தமிழக அரசும் இப்போது அதிரடி : ஊர் பெயர்களில் தாய்மொழி உச்சரிப்பே இனி ஆங்கிலத்திலும்.!

Update: 2020-06-11 02:12 GMT

கர்நாடக மாநிலத்தில் எல்லா ஊர் பெயரையும் தாய்மொழியான கன்னடத்தில் மாற்றி அதற்கு இணையான ஆங்கிலத்தில் தான் எழுதவேண்டும் என்று எடியூரப்பா அரசு ஏற்கனவே உத்தரவிட்டு அதை அமல்படுத்தி வருகிறது. பழைய "குல்பர்கா" இப்போது "கல்புர்கி", "பீஜபூர்" இப்போது "விஜயபுரா" மற்றும் பங்களுரு , மைசூரு, பெளகாவி, இப்படி மாறி விட்டன. இதற்கு கன்னட குடி மகன்களிடம் அமோக வரவேற்பு காணப்பட்டது. 

இந்த நிலையில் ஊர் பெயர்களை தமிழ் உச்சரிப்பை போன்றே ஆங்கிலத்திலும் உச்சரிக்க தமிழக அரசால் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி: தமிழ்நாட்டில் உள்ள ஊர் பெயர்கள் தமிழை போன்று ஆங்கிலத்திலும் எழுத, உச்சரிக்க வேண்டும். தமிழில்  எழும்பூர் என்று இருப்பதை ஆங்கிலத்தில் Egmore என அழைக்கப்பட்டும், எழுதப்பட்டும் வருகிறது. இனி மேல் தமிழை போன்று ஆங்கிலத்திலும் ezhumboor என்றே அழைக்க வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

அதே போல் திருவல்லிக்கேணி என்று இருப்பதை triplicane என்று இனிமேல் உச்சரிக்க கூடாது thiruvallikkenni என்றே உச்சரிக்க வேண்டும். என அரசின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. tuticorin என்பதை thoothukudi என அழைக்க வேண்டும். இவ்வாறு அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் இந்த உத்தரவுக்கு முன்பே சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் மட்டும் தமிழ் உச்சரிப்பையே ஆங்கிலத்திலும் காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  உதாரணம் : திருவல்லிகேணி. 

Similar News