மணமகனுக்கும், தந்தைக்கும் கொரோனா தொற்று அம்பலம் : ஜானவாஸத்துடன் நின்று போன திருமணத்தால் திடீர் அதிர்ச்சி.!

மணமகனுக்கும், தந்தைக்கும் கொரோனா தொற்று அம்பலம் : ஜானவாஸத்துடன் நின்று போன திருமணத்தால் திடீர் அதிர்ச்சி.!

Update: 2020-06-23 01:58 GMT

உத்தரபிரதேசத்தின் அமேதி மாவட்டத்தில் உள்ள கம்ரௌலி கிராமத்தை சேர்ந்த மணமகன் ஒருவருக்கு ஏற்கனவே திருமணம் நிச்சயிக்கப்பட்டு மணமகள் ஊரான கம்ரவுளி கிராமத்தில் திருமணத்துக்கான ஏற்பாடுகள் ஜோராக நடைபெற்றது. நேற்று காலையில் நடக்கவேண்டிய திருமணத்தை முன்னிட்டு முந்தைய நாள் இரவு மணமகனை அழைத்து வரும் ஜானவாஸ ஏற்பாடுகள் வெகு ஜோராக நடைபெற்றது.

மாப்பிள்ளையை திருமணம் நடக்கும் இடம் நோக்கி ஊர்வலமாக அழைத்து வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென சுகாதார அதிகாரிகளும், போலீசாரும் வாகனங்களில் வந்தனர். ஊர்வலத்தை தடுத்து நிறுத்திய அவர்கள் ஏற்கனவே சென்ற ஜூன் 15 ஆம் தேதி அமேதி மருத்துவமனையில் செய்யப்பட்ட பரிசோதனைகளின் முடிவில் மாப்பிள்ளைக்கும், அவரது தந்தைக்கும் கொரோனாவுக்கான வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு இருப்பதை வருத்தத்துடன் தெரிவித்தனர். அதற்கான பரிசோதனை முடிவுகளையும் காண்பித்தனர்.

சிகிச்சை முடிந்து உடல் நலம் பெற்றதும் திருமணத்தை நடத்திக் கொள்ளலாம் என கூறினர். இது அதிர்ச்சிகரமான செய்தியாக இருந்தாலும் அனைவரும் ஒப்புக் கொண்டு திருமணத்தை தற்காலிகமாக நிறுத்திக் கொள்வதாக கூறினர். இதை அடுத்து தந்தையும், மகனும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும் மணமகன் குடும்பத்தின் பத்து உறுப்பினர்கள் இப்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மணமகனும் அவரது தந்தையும் முழுமையாக குணமடையும் வரை திருமணம் நிறுத்தப்பட்டுள்ளது. 

Similar News