சசிகலா சிறையிலிருந்து எப்போது விடுதலை? தகவல் உரிமை சட்டம் மூலம் கேட்ட கேள்விக்கு சிறைத்துறை பதில் என்ன?

சசிகலா சிறையிலிருந்து எப்போது விடுதலை? தகவல் உரிமை சட்டம் மூலம் கேட்ட கேள்விக்கு சிறைத்துறை பதில் என்ன?

Update: 2020-06-12 14:23 GMT

வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவிப்பு தொடர்பான வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். அவர் விடுதலையாக இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், நன்னடத்தை விதிகள் மூலம் அவர் விரைவில் விடுதலையாவார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் எடப்பாடி தலைமையிலான அதிமுக ஆட்சி வரும் 2021 மே மாதத்துடன் நிறைவடைய உள்ளது. இதனால் தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கணித்துள்ளனர்.

இந்த நிலையில், பெங்களூருவை சேர்ந்த சமூக செயற்பாட்டாளரும் வழக்கறிஞருமான நரசிம்ம மூர்த்தி என்பவர், சசிகலாவின் ரிலீஸ் எப்போது,அவரை இதுவரை எத்தனை பேர், எத்தனை முறை சந்தித்துள்ளனர் என்பது உள்பட பல்வேறு கேள்விகளை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (ஆர்.டி.ஐ) மூலம் எழுப்பியிருந்தார்.

இதற்கு பெங்களூரு சிறைத்துறை நிர்வாகம் மழுப்பலாகவே பதில் அளித்துள்ளது. அதில், சிறை கைதிகளின் விடுதலை என்பது, பல்வேறு சிறை விதிமுறைகளுக்குட்பட்டது மேலும், சிறை கைதிகளுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை செலுத்துவது உள்ளிட்ட பல விஷயங்களை உள்ளடக்கியது.

எனவே சசிகலா ரிலீஸ் ஆகும் தேதியை திட்டவட்டமாக தெரிவிக்க முடியாது என்று சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் அவரை இதுவரை எத்தனை பேர், எத்தனை முறை சந்தித்துள்ளனர் என்பது உள்பட பல்வேறு கேள்விகளுக்கும் பதில் இல்லை. சிறைத்துறை சாக்கு போக்கு சொல்லியுள்ளது.

இது குறித்து வழக்கறிஞர் நரசிம்ம மூர்த்தி கூறுகையில் கர்நாடக மாநில சிறைத்துறையின் பதில் தெளிவற்று மழுப்பலாக இருப்பதாகவும், சரியான பதில் இல்லை என்றும் அதிருப்தியாக கூறியுள்ளார்.

Source - Patrikai 

Similar News