கொரோனா தாக்கத்தால் வேப்பிலையை அதிகம் பயன்படுத்தும் தமிழக மக்கள்.!

கொரோனா தாக்கத்தால் வேப்பிலையை அதிகம் பயன்படுத்தும் தமிழக மக்கள்.!

Update: 2020-06-17 05:32 GMT

கொரோனா கிருமித் தொற்றால் பயத்தில் உறைந்து போயிருக்கும் சென்னை வாசி களிடையே இப்போது வேப்பிலைப் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அத்துடன், நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தும் உணவு களையும் அவர்கள் சேர்த்து வருகின்றனர். ஆயுர்வேதத்திலும் சித்த மருத்து வத்திலும் தவிர்க்க முடியாத மருந்தாக இருந்து வரும் வேப்பி லையை மக்கள் நோய் எதிர்ப்பு காரணியாக அதிக அளவில் பயன் படுத்தத் தொடங்கி உள்ளனர்.

தினமும் வீட்டைச் சுற்றிலும் வேப்பிலைச் சாறு, மஞ்சள் கலந்த நீரைத் தெளித்து விடுகிறார்கள். வீட்டின் கதவுகள், கைப்பிடிகள், சன்னல் கம்பிகள் போன்ற அனைத்து இடங்களிலும் வேப்பி லையைச் செருகி வைத்துள்ளனர். மிளகு, வேப்பிலை, சுக்கு, இஞ்சி கலந்த மூலிகைச் சாறை தினமும் குடித்து வருகிறார்கள். இதுதவிர நெருப்பில் வேப்பிலை, சாம்பிராணித் தூள் சேர்த்து வீடு களில் புகை போடுகிறார்கள். இது காற்றில் உள்ள கிருமிகளை அழித்துவிடும் என்றும் கூறப்படு கிறது.

பெண்கள் இப்போது தங்கள் தலையில் வேப்பிலையைச் செருகிச் செல்கிறார்கள். இப்படி சென்னைவாசிகளின் வீடுகளில் ஒரு முக்கிய பொருளாக வேப்பிலை மாறிப் போய் உள்ளது. அதேபோல உண்ணும் உண விலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகம் தரும் பொருட்களை மக்கள் சேர்க்கத் தொடங்கி உள்ளனர். இதனால் பூண்டு, இஞ்சி, மிளகு, மஞ்சள் தூள் போன்றவற்றை சமையலில் அதிகம் பயன்படுத்து கிறார்கள். பெரும்பாலானோர் வீடுகளில் சுடுதண்ணீர் அருந்துகிறார்கள்.

ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக் குடி, திராட்சை, நெல்லிக்காய் போன்ற வைட்டமின் சி நிறைந்த, நோய் எதிர்ப்பு சக்திக்கு அதிகம் துணைபுரியும் பழங்களை அதிக மாக உண்பதாகவும்  தெரிவிகின்றனர்.

Similar News