இந்தியாவில் கொரோனா பாதிப்பு நவம்பரில் உச்சம் அடையும் என்ற தகவல் உண்மை கிடையாது : இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் திட்டவட்ட மறுப்பு.!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நவம்பரில் உச்சம் அடையும் என்ற தகவல் உண்மை கிடையாது : இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் திட்டவட்ட மறுப்பு.!

Update: 2020-06-15 10:15 GMT

இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட முதல் 8 வார கால ஊரடங்கால், கொரோனா உச்சநிலையை அடைவது, நவம்பர் மாதத்துக்கு தள்ளிப் போடப்பட்டதாகவும் எனவே நவம்பரில் கொரோனா உச்சத்தில் இருக்கும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சார்பில் 'செயல்பாடுகள் ஆராய்ச்சிக்குழு ஆராய்ச்சியாளர்கள்' நடத்திய ஆய்வு தெரிவிப்பதாக பல முன்னணி ஊடகங்கள் தகவல் தெரிவித்தன.

ஆனால் அது போன்ற ஆய்வு எதையும் தங்கள் சார்பில் நடத்தவில்லை என்றும், நவம்பர் மாதம் கொரோனா உச்சத்தில் இருக்கும் என்று கூறுவது பொய்யான தகவல் என்றும், நவம்பர் மாதத்தில் கொரோனா அதிகரித்து வென்டிலேட்டர் மற்றும் படுக்கைகளுக்கு பற்றாக்குறை ஏற்படும் எனவும் தகவல்கள் வெளியாகியிருந்த தகவலும் உண்மையல்ல எனவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய்க்கான 1,15,519 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு உள்ளதாகவும், இதுவரை மொத்தம் 57,74,133 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது. 

Similar News