இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் நடிகை தமன்னா மீது போலீசில் புகார் - என்ன காரணம்?

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் நடிகை தமன்னா மீது போலீசில் புகார் - என்ன காரணம்?

Update: 2020-07-30 06:00 GMT

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யக் கோரியும் அந்த விளம்பரத்தில் நடித்த தமன்னா மற்றும் இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோலி மீது போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் லாட்டரி சீட்டுகள், ரம்மி ஆகிவற்றை தடை செய்ய வேண்டுமென்று அரசு ஏற்கனவே கூறியிருக்கிறது. இது நடுத்தர மக்களின் வாழ்க்கையை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவாகும்.

இந்த கொரோனா ஊரடங்கினால் வீட்டில் இருக்கும் மக்கள் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி இருக்கின்றனர். தற்போதும் ஆன்லைனில் பல ஏராளமான சூதாட்ட கேம்கள் வந்துகொண்டே இருக்கின்றன. இதற்கு மக்கள் தங்களின் பணத்தை செலவு பண்ணி விளையாடி வருகின்றனர்.

இதனால் மக்கள்களுக்கு பெருமளவில் பொருளாதார சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் சென்னையில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த 20 வயது மாணவன் தற்கொலை செய்து கொண்டான். இது சமூக வலைத்தளங்களில் பரவலாக காணப்பட்ட ஒரு செய்தியாகும். இந்த மாணவன் மன உளைச்சல் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்திருக்கிறது.

இவ்வாறு பிரச்சினைகள் வர ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் பல பெரிய பிரபலங்களும்,கிரிக்கெட் வீரர்களும் அந்த விளம்பரங்களில் நடித்து வருவது அவர்களுக்கு ஒரு நம்பகத் தன்மையை ஏற்படுத்தி இருக்கிறது. எம்.பி.எல் சூதாட்ட கேம்மிற்கு விளம்பரங்களில் நடித்த விராட் கோலி மற்றும் தமன்னா மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று புகார் எழுப்பப்பட்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட கேமை ஒழிக்க வேண்டுமென்றும், அதற்கான விளம்பரங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகளை கைது செய்ய வேண்டும் என்றும் அய்யா வைகுண்டர் மக்கள் கட்சி சார்பில் டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

Similar News