முதல்வா் பழனிசாமி தலைமையில் கூடியது மருத்துவ நிபுணா்கள் குழு! தீவிர ஆலோசனையை தொடர்ந்து இன்று மாலை எதிர்பார்க்கப்படும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

முதல்வா் பழனிசாமி தலைமையில் கூடியது மருத்துவ நிபுணா்கள் குழு! தீவிர ஆலோசனையை தொடர்ந்து இன்று மாலை எதிர்பார்க்கப்படும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Update: 2020-07-30 05:28 GMT

ஊரடங்கு தளர்வின் மூன்றாம் கட்டத்தை நோக்கி இந்தியா பயணித்துக்கொண்டிருக்கும் நேரத்தில், பாதிப்பின் தன்மையை பொறுத்து நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையின் அடுத்த கட்டத்தை பற்றியும், பொது முடக்கத்தில் எவற்றுக்கெல்லாம் கூடுதல் தளர்வுகள் அளிக்கலாம் என்பது குறித்தும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் மருத்துவ நிபுணா்கள் குழுவினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

நேற்று (புதன்கிழமை) அனைத்து மாவட்ட ஆட்சியா்களுடன்  ஆலோசித்த நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா பாதிப்பு எந்த அளவில் உள்ளது, ஊரடங்கு கட்டுப்பாடுகள் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பன குறித்து விவாதித்தாா்.

ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், மாவட்ட நிர்வாகத்தால் எடுக்கப்பட்டு வரும் நோய் தடுப்பு நடவடிக்கை குறித்தும், மாவட்டத்தில் பதிவாகி வரும் நோய்த் தொற்று நிலவரங்கள் குறித்தும் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.

சில மாவட்டங்களில் நோய்த் தொற்று அதிகம் உள்ளதால், அந்த மாவட்டங்களில் மட்டும் இப்போதுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை தொடர்ந்து நீட்டிக்க வேண்டும் என்று அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியா்களுடனான ஆலோசனையை தொடர்ந்து, இறுதி முடிவு எடுக்க ஆயத்தமாகி வரும் அரசு, மருத்துவா் குழுவுடன் ஆலோசனை நடத்த முடிவு செய்தது.

அதன்படி, முதல்வா் எடப்பாடி பழனிசாமி மருத்துவா் குழுவுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். தலைமைச் செயலகத்தில் இன்று காலை 10 மணியளவில் தொடங்கிய ஆலோசனைக் கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் குறித்த அதிகாரப்பூா்வ அறிவிப்புகள் இன்று மாலை வெளியாகலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.

Similar News